வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யோசிக்காமல் முடிவெடுத்த உதயநிதி.. ரெட் ஜெயண்ட் கை மாறியதால் வந்த வினை

Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு, ஒரு சினிமா தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தான் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார். கடந்த 2008 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில். வெளியான குருவி படம் தான் இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படமாகும். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் உதயநிதி ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து, விநியோகித்துக் கொண்டிருந்தும் இருந்த உதயநிதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன் பின்னர் இந்த வருடம் அவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் விளையாட்டு துறை அமைச்சராக பணியமர்த்தப்பட்டார். இதனால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என அறிக்கையும் வெளியிட்டு விட்டார்.

Also Read:சமீபத்தில் அசுர வளர்ச்சி அடைந்த 5 நடிகர்கள்.. கமல் வரை கூப்பிட்டு பாராட்டிய குறட்டை மன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் தான் அவருடைய கடைசி படம். முழுக்க அரசியலில் இறங்கி இருக்கும் உதயநிதி இனி சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை. தன்னுடைய அப்பா மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் வேலைப்பளுவை குறைப்பதற்காகவே இவர் பல துறைகளையும் கண்காணித்து வருகிறார்.

உதயநிதி, முழு நேர அரசியல்வாதியானதால் இனி சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேலைகளிலும் தலையிடுவதாக தெரியவில்லை. இதனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உதயநிதியிடம் இருந்து கை மாறிவிட்டது. அந்த தயாரிப்பு நிறுவனத்தை தற்போது பார்த்துக் கொள்வது அவருடைய மனைவி கிருத்திகா தான். உதயநிதி தன்னுடைய அரசியல் கனவை நினைவாக்க வேண்டும் என்பதில், கிருத்திகாவை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார்.

Also Read:கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன்.. ஜெயிலர் படத்தில் இருக்கும் நிறை, குறைகள்

சினிமா மற்றும் அரசியல் என எதிலுமே கலந்து கொள்ளாமல் இருந்த கிருத்திகா உதயநிதி, தன்னை ஒரு இயக்குனராக மாற்றிக் கொண்டார். வணக்கம் சென்னை, காளி போன்ற படங்கள் இவர் தயாரித்தது தான். தற்போது பேப்பர் ராக்கெட் என்னும் வெப்சீரிசை இயக்கி வந்தார். அந்த சீரிஸின் பிரமோஷன் பேட்டிகளில் கூட கலந்து கொண்டிருந்த கிருத்திகாவுக்கு தற்போது அதை முழுதாக இயக்கி முடிக்க கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வேலைப்பளு காரணமாகத்தான் கிருத்திகாவால் அந்த சீரிஸை முடிக்க முடியவில்லை. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களை பார்த்து ஓகே செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக ஒரு பேட்டியில் ஜாலியாக சொல்லி இருப்பார். தற்போது அந்த வேலைகள் எல்லாமே அவருடைய மனைவியின் தலையில் விழுந்ததால் கிருத்திகாவால் தன் கனவை நோக்கி பயணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

Also Read:ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

 

Trending News