திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பொங்கலுக்கு 3 முக்கிய படங்களை பார்த்து ஒதுங்கிய இந்தியன் 2.. ரிலீஸ் செய்தியை லாக் செய்த உதயநிதி

Indian 2 Release Date: தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக இருப்பது இந்தியன் 2. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் முதல் பாடத்தின் வெற்றிதான். மேலும் இரண்டாம் பாகத்தின் வேலைகள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. சில எதிர்பார்க்காத காரணங்களால் 60% படப்பிடிப்போடு முடிந்த வேலைகள், இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் மற்றும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் ரிலீஸ்க்கு எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய முக்கிய ஹீரோக்களின் மூன்று படங்களும் ரெடியாகி கொண்டிருக்கின்றன.

Also Read:இந்தியன்-2 படம் பார்த்த பின் ஷங்கருக்கு பல லட்சம் பரிசு கொடுத்த கமல்.. இவ்ளோ காஸ்ட்லி வாட்சா.?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் 3 D தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. மேலும் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் கங்குவா திரைப்படம் வரலாற்று புனைவு கதை எனவும் சொல்லப்படுகிறது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படம், சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவில் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்த இந்தியர்களை பற்றி எடுக்கப்படும் கதை. இந்த படத்தையும் பொங்கலில் தான் படக்குழு ரிலீஸ் செய்ய இருக்கிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கல் ரிலீசுக்கு தான் பிளான் பண்ணப்பட்டிருக்கிறது.

Also Read:இதுக்கு லோகேஷ் பரவாயில்ல.. ஷங்கரால் படாத பாடுபடும் இந்தியன் 2 படக்குழு

கங்குவா, தங்கலான், கேப்டன் மில்லர் என இந்த மூன்று படங்கள் பொங்கல் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்க இந்த ரேசிலிருந்து இந்தியன் 2 விலகி இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்பட பிரமோசனின் போது சொல்லி இருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறார். ஏப்ரல் மாதம் என்பதால் கண்டிப்பாக தமிழ் புத்தாண்டு அன்று தான் இந்த படம் ரிலீஸ் ஆகும்.

படத்தின் 25 சதவீத வேலைகள் மட்டுமே இன்னும் மீதம் இருப்பதாகவும், அதுவும் விரைவில் முடிக்கப்பட இருப்பதாகவும் உதயநிதி சொல்லி இருக்கிறார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் எடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், அது பற்றி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மீடியா முன் உதயநிதி அறிவித்து இருக்கிறார்.

Also Read:கமலுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்

- Advertisement -

Trending News