தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக தயாரிப்பாளராக இருந்த இவர் இப்படம் மூலம் நடிகராக களமிறங்கினர். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதேபோல் இவர் நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ என்ற படத்தில் உதயநிதி நடித்திருந்தார். இப்படத்தில் பார்வையற்ற இளைஞராக நடித்திருந்த உதயநிதியுடன் இணைந்து நித்யா மேனன் மற்றும் அதிதிராவ் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் சைமா 2020 விழாவில் 9 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதன் முறையாக உதயநிதி நடிப்பில் வெளியான படம் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், உதயநிதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இப்படம் 9 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் நிச்சயம் ஏதேனும் ஒரு விருதை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேபோல் இப்படம் உதயநிதியின் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படம் என்பதால் நிச்சயம் விருது பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.