ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தளபதி இல்லாத உதயநிதி ஸ்டாலினின் புதிய பட்டம்.. என்னென்ன சொல்றாங்க பாருங்க!

பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் சினிமாவின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் உதயநிதி ஸ்டாலின். தற்போது சினிமாவையும் அரசியலையும் ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார்.

கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று மாபெரும் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதவி ஏற்ற நாளிலிருந்தே தன்னுடைய வேலைகளை தொடங்கிவிட்டார்.

இதனால் அடுத்த ஐம்பது வருடத்திற்கு அந்த பகுதியில் உதயநிதி ஸ்டாலின்தான் எம்எல்ஏ என அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அரசியலை மட்டும் இல்லாமல் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்டிகல் 15 என்ற ஹிந்திப் பட ரீமேக், மகிழ்திருமேனி படம் என வரிசைகட்டி நிற்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து இடி முழக்கம் என்ற படத்தை எடுத்து வருகிறார். அவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில் சீனு ராமசாமி உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அன்பன் என்ற அடைமொழி பட்டத்தையும் கொடுத்துள்ளார். மக்கள் திலகம், மக்கள் செல்வன் ஆகியோருக்கு பிறகு மக்கள் அன்பன் பட்டம் பெரிய அளவில் பேசப்படுமாம்.

udhayanidhi-stalin-cinemapettai
udhayanidhi-stalin-cinemapettai

Trending News