புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டபுள் டக்கர் பஸ்ஸில் டிரவல் செய்ய ஆசைப்படும் உதயநிதி.. ஜெயிக்குமா இந்த பேராசை

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தற்போது படங்களில் நடிப்பதை காட்டிலும் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி வருகிறது. இவ்வாறு உதயநிதி சினிமா, அரசியல் என்ற இரண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்கமாட்டார் என்ற செய்திகள் வெளியானது. அதாவது மாமன்னன் படம் தான் அவருடைய கடைசி படம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து உதயநிதியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தில் மனசுக்கு நேர்மையாக உண்மையான உழைப்பை போட்டதால் இப்படம் வெற்றி கொடுத்ததாக பேசினார்.

இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என்று கேள்வி உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, சமூகப் பொறுப்புள்ள கதைகள் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறி உள்ளார்.

மேலும் தன்னுடைய தாத்தா மு கருணாநிதி சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்தார். அதே போல் நானும் பயணிப்பேன் என செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியுள்ளார். இவ்வாறு ஒரே நேரத்தில் சினிமா, அரசியல் என இரண்டிலும் பயணிக்க ஆசைப்படும் உதயநிதிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News