வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயனுக்காக ஓரமாக வழிவிட்ட உதயநிதி.. அந்த அளவுக்கு பாசம் போல

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டுள்ளது.

இப்படம் தற்போது கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரெடக்ஷன் உடன் இணைந்த லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் கைப்பற்றியுள்ளார்.

மேலும் வெளிமாநிலங்களில் லைகா நிறுவனம் டான் படத்தை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு புது படம் வெளியானால் பழைய படத்திதை தியேட்டர் உரிமையாளர்கள் குறைத்து விடுவார்கள்.

இதனால் அந்த படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் டான் படத்தை எடுக்க வேண்டாம் இந்த இரண்டு படத்தையும் சரிசமமாக தியேட்டரை கொடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம். சிவகார்த்திகேயன் டான் படத்தை எப்படியாவது 100 கோடி வசூல் சாதனை செய்த விட வேண்டும் என நினைத்திருந்தார்.

அந்த அளவிற்கு டான் படத்தை பார்த்து பார்த்து திரையரங்குகளில் வெளியிட்டார். அதாவது ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப், பீஸ்ட் போன்ற படங்களுடன் இப்படத்தைப் வெளியிட்டால் கண்டிப்பாக வசூல் பாதிக்கும் என கருதி பெரிய பட்ஜெட் படங்கள் வெளியான பிறகு தனது டான் படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இரண்டு படத்திற்கும் சரிசமமாக தியேட்டர் கொடுத்துள்ளதால் கண்டிப்பாக டான் படம் 100 கோடி வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை உதயநிதி இவ்வாறு செய்யவில்லை என்றால் டான் படம் வசூல் சாதனை படைக்க முடியாது.

Trending News