தேர்தல் கலாட்டாக்கள் ஆரம்பித்ததிலிருந்தே உதயநிதி ஸ்டாலின் செய்த தரமான சம்பவம் பற்றி தான் தற்போது வரை பேசி வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனையில் ஒரே ஒரு செங்கலை வைத்து மொத்த ஆட்சியையும் மாற்றி விட்டதாக கூறிவருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகராக வலம் வருகிறார்.
உதயநிதிக்கு சிறுவயதிலிருந்து அரசியல் ஆர்வம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த எம்பி தேர்தலுக்கும் சரி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் சரி, திமுக கட்சியின் பிரதான பேச்சாளராக மாறினார் உதயநிதி ஸ்டாலின்.
இது ஒருபுறமிருக்க சினிமாவிலும் கடந்த சில வருடங்களில் யதார்த்தமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் ஒரு நல்ல நடிகர் என பெயர் எடுத்து விட்டார். கடைசியாக வந்த சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாக இவருக்கு ஒரு நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த ஆர்டிகல்15 படத்தின் தமிழ் ரீமேக்கில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா என்பவர் இயக்கி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அநியாயத்திற்கு அந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார்.
