தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியதோடு, அதில் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சியான திமுக, தனது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே போல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் ஒரு பெண்ணைப் பற்றியும், தமிழ்நாட்டின் தலைவராக இருக்கும் முதல்வரை பற்றியும் அவதூறாக விமர்சித்து இருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், பெண்கள் அமைப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது திமுக கட்சியில் உதயநிதி ஸ்டாலின் செய்யும் அராஜகங்களை திமுகவினராலயே பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம். இதனால் திமுகவினர் மத்தியில் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதே போல், திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பு கொடுக்காமல், உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிகளை கொடுத்ததால், திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் மத்தியில் உதயநிதிக்கு எதிரான மனநிலையே மேலோங்கி காணப்படுகிறது.
இவ்வாறு ஒரு நிலையில், பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உரையாற்றும்போது, முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதோடு, நாகரீகமற்ற முறையில் இரண்டு அர்த்த வார்த்தைகளை கூறி விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் உதயநிதியின் இந்த செயலால் பொதுமக்கள், மாதர் சங்கங்கள் போன்றோர் சமூக வலைத்தளங்களில் வாயிலாக தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், உதயநிதி தானும் ஒரு பெண் வயிற்றில் பிறந்ததை மறந்துவிட்டு இவ்வாறு பேசி இருக்கிறார் என்றும், கண்ணியத்திற்கும் திமுகவிற்கும் ஒருநாளும் சம்பந்தமே இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதே போல், மூத்த பத்திரிகையாளரான ராதாகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உதயநிதியின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், வெறுக்கத்தக்க வகையில் ஒரு பெண்ணைப் பற்றி உதயநிதி இவ்வாறு பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், இது தலைவனுக்கான பண்பல்ல என்றும் கூறியுள்ளார்.
எனவே, உதயநிதியின் இந்த கீழ் தனமான பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை சமூக வலைத் தளங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.