திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2வது நாளில் ஆட்டம் கண்ட மாமன்னன் வசூல்.. மாரி செல்வராஜால் மோசம் போன உதயநிதி

Maamanan 2 Day Collection: உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடித்திருந்தனர்.

மேலும் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. அதாவது மாரி செல்வராஜ் இந்த படத்தை தேவர் மகனின் இசக்கி கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கியதாக கூறியிருந்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பிரளயமே ஏற்பட்டு இருந்தது.

Also Read : உண்மையான மாமன்னன் தனபாலுக்கு நடந்த அவமானம்.. உதயநிதியின் விரலை வைத்து அவர் கண்ணை குத்திய மாரி செல்வராஜ்

இந்த சூழலில் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் அப்படி என்னதான் எடுத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்ததால் முதல் நாளில் கலெக்ஷனை அள்ளியது. அதன்படி கிட்டத்தட்ட 6.75 கோடி முதல் நாளில் மாமன்னன் வசூல் செய்தது. ஆனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளது.

ஆனால் படத்தில் பிளஸ் பாய்ண்டாக கூறப்படுவது வடிவேலு மற்றும் பகத் பாசிலின் நடிப்பு. இருவரும் தங்களது முழு நடிப்பு திறனையும் இப்படத்தில் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள். மேலும் வடிவேலு பாடிய பாடல் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்திருந்தது. ஆனால் சாதியை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளதாக சில மோசமான விமர்சனங்களும் எழுந்தது.

Also Read : இந்தியன் 2 கிளைமாக்ஸில் உள்ள ட்விஸ்ட்.. உதயநிதி பட்டையை தீட்டி வரும் அடுத்த பாகம்

இதன் காரணமாக இரண்டாவது நாள் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் முடிவில் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆகையால் இதுவரை மொத்தமாக 10.75 கோடி வசூலை மாமன்னன் படம் பெற்றிருக்கிறது.

உதயநிதி மாமன்னன் படத்தின் மூலம் நல்ல வசூலை பெறலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது நாள் மண்ணை கவ்வி உள்ளது. ஆனால் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் போட்ட பட்ஜெட்டை எப்படியும் படக்குழு எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Also Read : மாரி செல்வராஜால் ரணகளமாகும் சோசியல் மீடியா.. உண்மையான மாமன்னன் இவர் தான்

Trending News