புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

செம தில்லாய் காத்திருக்கும் உதயநிதி.. தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் எடுபடாத விஜய்யின் அரசியல் பேச்சு

நடிகர் விஜயின் நடிப்பில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்திற்கான சென்னை, கோவை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில் அண்மையில் எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே தற்போது அவர் அரசியலிலும், படங்களை விநியோகம் செய்வதிலும் மும்முரமாக வேலை செய்து வருகிறார். அஜித்தின் துணிவு படத்தின் மொத்த தமிழநாட்டின் விநியோகஸ்தராக களமிறங்கியுள்ள உதயநிதி அப்படத்தின் வசூலை கண்காணிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனிடையே அண்மையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

Also Read:  வாரிசு படத்தால் 9 படங்களை இழக்க நேரிடும்.. தியேட்டர் உரிமையாளருக்கு செக் வைத்த உதயநிதி

அப்போது நடிகர் விஜய் மேடையில் பேசியபோது, எனக்கு எதிரி நான் தான் என அஜித்தை மறைமுகமாக தாக்கினார். மேலும் என் பின்னால் ரசிகர்களும், மக்களும் அளவு கடந்து உள்ளார்கள் என அரசியல் ரீதியாகவும் விஜய் பேசினார். இதனிடையே நடிகர் விஜய் கூடிய விரைவில் அரசியலில் தனி ஆளாக தேர்தலை சந்திக்கபோவதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் அரசியல் பேசியதற்கு உதயநிதியும் ஓர் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. உதயநிதியால் வாரிசு படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் இருந்தது. இதன் காரணமாக உதயநிதிக்கும் விஜய்க்கும் பல மனஸ்தாபங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

Also Read: முதல்வருக்கு பயோபிக் ரெடி.. தலைவி பாணியில் தனுஷ் பட நடிகருக்கு வலை வீசிய உதயநிதி

இதன் காரணமாகத்தான் விஜய் தன் பக்கமும் மக்கள் பலம் உள்ளது என அந்த மேடையில் தெரிவித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜயின் பேச்சை கண்டும், காணாதது போல் உதயநிதி தற்போது வரை அமைதியாக இருப்பது தான் பலருக்கும் குழப்பமாக உள்ளது .உதயநிதி நினைத்திருந்தால் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடக்க விடாமலே செய்திருக்கலாம்.

ஏனென்றால் நேரு ஸ்டேடியம் அவர் கட்டுப்பாட்டின் கீழ் தான் தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால் உதயநிதி பொறுமையாக இருந்ததால் பலரும் அவரிடம் கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் விஜயுடன் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடி வருகிறேன் என்றும், அவர் எனது நண்பர்தான் எனவும் விஜயை உதயநிதி விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார். ஆனால் இதனை யாரும் நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை.

Also Read: வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய விஜய்.. ரிலீசுக்கு முன்பே துணிவை விட 2 மடங்கு கல்லா கட்டிய வாரிசு

Trending News