வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத ரெட் ஜெயண்ட்.. மும்மூர்த்திகள் செய்யப் போகும் வேலை

Red Giant – Udhayanidhi: உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்போது சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை இந்நிறுவனம் தான் வெளியிட்டு வந்தது. இந்த சூழலில் மற்ற நிறுவனங்கள் உதயநிதி மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஏனென்றால் அவரிடம் கணக்கு வழக்கு சரியாக இருந்ததால் படங்கள் அவரது கைவசம் தான் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் லியோ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தது. இந்நிலையில் இப்போது யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக உதயநிதி முக்கிய முடிவு ஒன்று எடுத்திருக்கிறார். அதாவது சினிமாவில் மட்டுமன்றி அரசியலிலும் உதயநிதி செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் அவர் ஏதாவது சிறு சச்சையான விஷயத்தை செய்தாலும் அது அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் கமல், மணிரத்தினம் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தங் லைஃப் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனாலும் சர்ச்சையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : ரெட் ஜெயண்ட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் கமல், மணிரத்தினம்.. உதயநிதி தலையில் அரைத்த மிளகாய்

அதாவது கமல் படம் என்றாலே அதில் பிரச்சனை என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அவருடைய தேவர் மகன் படத்தின் டைட்டில் கூட பிரச்சனையை ஏற்படுத்தியது. இப்போது தங் லைஃப் படத்திலும் அவருடைய பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று கமல் கூறியிருக்கிறார்.

இவ்வாறு ஒரு சமூகத்தை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக சர்ச்சை வெடிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் உதயநிதி சாதி அடிப்படையில் இந்த படம் இருக்கக்கூடாது என்பதை மணிரத்தினம் இடம் கூறியிருக்கிறாராம். ஆகையால் படத்தில் சாதி ரீதியான காட்சிகள் எதுவும் இருக்காது என்பது போல தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : உதயநிதியிடம் மட்டும் உத்தமன் வேஷம் போட்ட நடிகர்.. மீண்டும் தலைவிரித்து போடும் ஆட்டம்

Trending News