திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பதவி, பணம் வந்தாலும் மாறாத உதயநிதி.. என்னது அஜித் இவர்கிட்ட கத்துக்கணுமா? நம்புற மாதிரி இல்ல

உதயநிதி சினிமாவுக்கு வந்த புதிதில் இவரெல்லாம் ஒரு ஹீரோவா என பலரும் கலாய்த்தனர். ஆனால் தற்போது நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பரிமாணங்களைக் உதயநிதி கொண்டுள்ளார். இவ்வாறு சினிமாவில் அவருடைய வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.

இப்போது உதயநிதியை பார்த்து அஜித் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர் கூறி வருகிறார்கள். அதாவது ஒரு காலகட்டத்தில் யார் உதவி என்று கேட்டாலும் தேடி போய் உதவி செய்து வந்தவர் அஜித். இப்போது சினிமாவில் உயர்ந்து மாஸ் நடிகராக வலம் வருகிறார்.

Also Read : என்ன மீறி யாரு வாங்குறான்னு பாக்கலாம்.. உதயநிதியிடம் சரண்டர் ஆன வாரிசு படக்குழு

அஜித் இப்போது உதவி செய்தாலும் ஒளிந்து வாழ்ந்து வருவது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய படத்தின் பிரமோஷனில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனால் உதயநிதி அன்று போல இன்றும் எல்லோரிடமும் சகஜமாக பழகி வருகிறார்.

அதாவது அஜித்தின் சொத்து மதிப்பை காட்டிலும் உதயநிதிக்கு பல மடங்கு அதிகம் சொத்து உள்ளது. ஆனால் இன்றும் அவர் எளிய மனிதராக இருப்பதால் எல்லோருமே எளிதில் அவரை அணுக முடிகிறது. சாதாரணமாக ஃபோனில் அழைத்தால் கூட உதயநிதி பேசுவார்.

Also Read : யாரையும் அவ்வளவு சீக்கிரமா நம்ப மாட்டேன்.. அஜித்தின் இன்றைய மாற்றத்திற்கு இதுதான் காரணம்

அதுமட்டுமின்றி சமீபத்தில் சினிமா பிரபலம் ஒருவரின் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு உதயநிதி இரவோடு இரவாக சென்ற அவர்களுக்கு பண உதவி செய்து உயிரை காப்பாற்றி உள்ளார். இவ்வாறு பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

முன்பொரு காலத்தில் உதயநிதியை போல தான் அஜித் யாராக இருந்தாலும் உதவி செய்து வந்தார். ஆனால் இப்போது அஜித் அதை மறந்து விட்டார். ஆகையால் உதயநிதியிடம் பணம், புகழ் வந்தாலும் ஒரே நிலையில் இருக்கும் விஷயத்தை அஜித் கற்றுக்கொள்ள வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என அஜித் ரசிகர்கள் கோபப்படுகிறார்கள்.

Also Read : நாங்க கேட்டும் அவங்க தரல.. வாரிசு பஞ்சாயத்து குறித்து மௌனம் கலைத்த உதயநிதி

Trending News