செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவருடைய படங்களை விநியோகம் செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். எப்படியும் விஜய்யின் படம் லாபத்தை தரும் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய்யின் பிசினஸை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் நொறுக்கி உள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறி உள்ளார். எந்த அரசியல் கட்சிக்கும் பயப்படாமல் தன்னுடைய கருத்துக்களை ஊடகங்களில் தெள்ளத் தெளிவாக சொல்லக்கூடியவர் தான் சவுக்கு சங்கர்.

Also Read : வாரிசு படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் அசிங்கப்பட்ட பிக் பாஸ் நடிகை.. குஷ்புக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்ல

இந்நிலையில் உதயநிதியை பற்றி சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசிய சவுக்கு சங்கர் தந்தை அரசியலில் முதலமைச்சரான பிறகு தான் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழ் சினிமாவில் ஆதிக்கத்தை கைப்பற்றியது. கடந்த வருடம் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தவிர மற்ற எல்லா பெரிய படங்களையும் உதயநிதி தான் வெளியிடுகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு என்று ஒரு பிசினஸ் உள்ளது. அதையும் தற்போது உதயநிதி உடைத்துள்ளார். அதாவது பல கோடிக்கு படத்தை எடுத்து வைத்திருந்தாலும் தியேட்டரில் வெளியிட விநியோகஸ்தர் தேவை. இப்போது உதயநிதி சொன்னால் மட்டுமே திரையரங்குகளில் படம் வெளியிடுகின்றனர்.

Also Read : நீதிடா, நேர்மைடா.. நாட்டாமை பாணியில் விஷாலுக்கு செக் வைத்த உதயநிதி

அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் முதலில் கைப்பற்றியது. ஆகையால் வாரிசு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என பெரிய இடத்தில் இருந்து அழுத்தம் வந்ததாக சவுக்கு சங்கர் உள்ளார். ஒரு மாஸ் நடிகராக இருந்த விஜய்யின் பிசினஸையே உதயநிதியால் தற்போது உடைக்க முடிகிறது.

அந்த அளவுக்கு அரசியல் மற்றும் சினிமா இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் அவர்கள் வைத்துள்ளதாக விளாசி உள்ளார். மேலும் தொடர்ந்து இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 ஆகிய படங்களையும் உதயநிதி தான் வெளியிட உள்ளார். ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள் உதயநிதியை நம்பி உள்ளார்கள் என்பதை சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Also Read : இணையத்தில் லீக்கான புகைப்படம்.. பதறிப்போய் கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு

Trending News