வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் வடிவேலு.. பிரம்மாண்டமாக மேடை போட்டு கொடுக்கும் உதயநிதி

வடிவேலு தற்போது தன்னுடைய ரீ என்ட்ரி மூலம் ரொம்பவும் பிசியாகிவிட்டார். அதில் இப்போது அவருடைய கைவசம் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் இருக்கின்றன. இந்த இரு படங்களில் மாமன்னன் படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் மாமன்னன் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கும் வடிவேலு ஆடியன்சை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்வார் என்று இயக்குனர் பல பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.

Also read: குடிப்பதற்காக பலான வேலையை பார்த்து வந்த வடிவேலு.. உச்சகட்ட கோபத்தில் சக நடிகர் கொந்தளிப்பு

இதுவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த ராசா கண்ணு பாடலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதை தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் படி இந்த நிகழ்ச்சி வரும் 1 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

அதற்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ள நிலையில் வடிவேலுவின் பேச்சு அந்த மேடையில் எப்படி இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். ஏனென்றால் இப்படம் அரசியல் களத்தை மையப்படுத்தி இருக்கும் என்ற ஒரு பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

Also read: உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் முழிக்கும் ரெட் ஜெயண்ட்

அதற்கு ஏற்றார் போல் வெளிவரும் போஸ்டர்களும் அதை உறுதி செய்கிறது. அந்த வகையில் மாமன்னன் விழா மேடையிலும் வடிவேலு அரசியல் பேச அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அருகில் உதயநிதி இருக்கும் போது வேறு என்ன வேண்டும். அந்த தைரியத்தில் அவர் கெத்தாக பேசலாம் அல்லது முற்றிலும் சைலன்ட் மோடுக்கு கூட செல்லலாம்.

எது எப்படி இருந்தாலும் வடிவேலு அடுத்த கட்ட சர்ச்சைக்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனாலேயே அந்த மேடையில் அவரின் பேச்சை உன்னிப்பாக கவனிக்கவும் மீடியாக்கள் தயாராகி விட்டன. அந்த வகையில் அந்த மேடை வடிவேலுவுக்கு அடுத்தடுத்த வாய்ப்பை பெற்றுத் தருமா அல்லது சோலியை முடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: பொழப்பு போயிரும்னு பொத்திகிட்டு இருக்காங்க.! ஒரே படத்தில் வடிவேலுவை வெறுத்த காமெடியன்

Trending News