புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூட்டோடு சூட்டாக எதிர்நீச்சலை கைப்பற்றிய உதயநிதி.. ஒரிஜினல் குணசேகரனை காட்ட பிளான் பண்ணிய கலைஞர் டிவி

Ethirneechal – Kalaingar Tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிந்து ஒரு மாதம் ஆகிய நிலையிலும் இப்பொழுது வரை அதனுடைய தாக்கம் மக்களிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியாவது இரண்டாம் பாகம் சீக்கிரத்தில் வந்து விடாதா என்று ஏங்கிக் கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் எதிர்நீச்சல் நாடகத்தை எடுத்த இயக்குனர் திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம் அளித்த பேட்டியில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்.

ஆனால் அதற்கு பதிலாக அதே மாதிரி கதைகளை வைத்து வேறொரு பிளானில் இறங்கி இருப்பதாகவும், அதை கூடிய விரைவில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். இதனால் இதற்கான வேலைகளை அடுத்தடுத்து செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கூடிய விரைவில் சன் டிவியில் ஜீவானந்தம் புது அத்தியாயத்துடன் என்டரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜாவாக ஜொலிக்க போகும் ஒரிஜினல் குணசேகரன்

இந்த சூழ்நிலையில் பொதுவாக சன் டிவியில் ஹிட்டான சித்தி, மெட்டி ஒலி போன்ற சில சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து மக்களை கவர்ந்து வந்தது. அதிலும் சன் டிவியில் இருந்து இந்த மாதிரி ஒரு வெற்றி நாடகங்களை வாங்கி மீண்டும் ஒளிபரப்பு செய்வது கலைஞர் டிவி தான். அந்த வகையில் சமீபத்தில் முடிந்து போன எதிர்நீச்சல் சீரியல்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்ட கலைஞர் டிவி, சன் டிவியிடம் இருந்து எதிர்நீச்சல் முதல் பாகத்தை வாங்க போகிறது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் டிவியில் இன்னும் சில மாதங்களில் எதிர்நீச்சல் முதல் பாகம் வரப்போகிறது. அந்த வகையில் சூட்டோடு சூட்டாக இந்த காரியத்தை செய்தால் தான் மக்களிடம் இந்த நாடகத்திற்கான தாக்கம் அப்படியே இருக்கும். அதிலும் ஒரிஜினல் குணசேகரன் நடித்த கதைகளை கொண்டு வந்தால் மக்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் என்பதில் சேனல் தெளிவாக இருக்கிறது.

அந்த வகையில் கலைஞர் டிவியில் ஒரிஜினல் குணசேகரன் நடித்த எதிர்நீச்சல் முதல் பாகம் மறு ஒளிபரப்பு செய்ய தயாராகிவிட்டது. இன்னொரு பக்கம் ஜீவானந்தம் மறுபடியும் சன் டிவி மூலம் புது அத்தியாயத்தை கொடுப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் சீரியலை மிஸ் பண்ணியவர்கள், ஒரிஜினல் குணசேகராக நடித்த மாரிமுத்துவை பார்க்கும் வகையிலும் இனி கலைஞர் டிவியில் எதிர்நீச்சல் முதல் பாகத்தை பார்த்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் இயக்கக்கூடிய கதைக்கு காத்துக் கொண்டிருப்பவர்கள் சன் டிவி மூலம் வரும் புது அத்தியாயத்திற்கு தயாராகிக் கொள்ளலாம். மேலும் கலைஞர் டிவியில் வரப்போகும் எதிர்நீச்சல் முதல் பாகம் நிச்சயமாக அவர்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் எங்கே போனாலும் ராஜாவாகத்தான் ஜொலிப்பார்.

எதிர்நீச்சல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News