திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சொந்த செலவில் சூனியம் வைத்த உதயநிதி.. மாமன்னன் ரிலீசுக்கு ஏற்பட்ட சிக்கல்

Actor Udhayanidhi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்றதால் அரசியல் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்தனர். ஆனால் அதையும் மீறி தேவர் மகன் சர்ச்சையால் படத்தின் எதிர்பார்ப்பு கூடுதலானது.

கமலின் தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் சாதிய படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதில் இடம்பெறும் இசக்கியை வைத்து தான் மொத்த கதையையும் எடுத்துள்ளாராம். இவர் இந்த விஷயம் சொன்னதிலிருந்தே இணையத்தில் மிகப்பெரிய பிரளயமே ஏற்பட்டிருக்கிறது.

Also read: வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்

பெரும்பாலானோர் கமலுக்கும், தேவர் மகன் படத்திற்கும் ஆதரவு அளித்து வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் கூட இப்போது அவரை சாடி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வாய் துணுக்கு மாரி செல்வராஜ் கூறிய விஷயம் தான்.

அதுமட்டுமின்றி தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரமும் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் தான். இதில் எப்படி இப்படம் சாதிய படமாக இருக்கும் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் மாமனான் ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் பல இடங்களில் படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Also read: எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு லியோ ரிலீஸ்ல தெரியும்.. மறைமுகமா மிரட்டி உருட்டி பார்க்கும் உதயநிதி

அந்த வகையில் மாமன்னன் படத்தை திரையிட்டால் தேனி வெற்றி திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் என சில கட்சியினர் எச்சரித்து திரையரங்கு மேலாளரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். பொதுவாக பிரச்சனை உள்ள படங்களை உதயநிதி தலையிட்டு தான் வெளியிடுவார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸில் சிக்கல் இருந்தது. இப்போது அதை உதயநிதி விநியோகம் செய்கிறார். மற்றொருபுறம் கிடப்பில் போட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போது நடப்பதற்கு காரணமும் இவர்தான். ஆனால் இயக்குனரால் இப்போது உதயநிதியின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

Also read: இவ்வளவு பிரச்சினையிலும் உதயநிதி செய்த விளம்பரம்.. நாலா பக்கமும் குவியும் காசு

Trending News