வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமலை நிராகரித்த உதயநிதி.. பிரபல நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆண்டவர்

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது சினிமாவில் முழுவீச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பில் தான் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களின் படங்களை தயாரிக்க திட்டம் தீட்டி உள்ளார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க போகிறார். இதைத்தொடர்ந்து உதயநிதியின் படத்தை தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இப்போது உதயநிதி படத்தை விநியோகம் செய்வது மற்றும் அரசியல் ஆகியவற்றில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : புத்திசாலித்தனமாக பின்வாங்கிய உதயநிதி.. டிசம்பர் 24 பதிலடி கொடுக்க நாள் குறித்த கமல்

அதுமட்டுமின்றி சமீபத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்று உள்ளார். ஆகையால் அரசியலில் அவரது வேலை சுமை அதிகமாக இருப்பதால் படங்களில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

அமைச்சர் பதவி ஏற்றதும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று கூறியிருந்தார். ஆகையால் கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே வேறு ஒரு நடிகரை தற்போது ஆண்டவர் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார்.

Also Read : ஊர் ஊராக அலையவிடுறாங்க.. உதயநிதியிடம் முதல் கோரிக்கை வைத்த சங்க தலைவர் விஷால்

அதாவது கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் விஜய் சேதுபதி இடம் உதயநிதிக்கு எழுதப்பட்ட கதையை ராஜ்கமல் பிலிம்ஸ் கூறியுள்ளனர். அதற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொல்லி உள்ளார்.

இதனால் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இந்த படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Also Read : 7 வருடங்களாக சந்தித்த அவமானம்.. 25 படங்கள் நடித்தும் விஜய் சேதுபதி வில்லனுக்கு கிடைக்காத அங்கீகாரம்

Trending News