Maamannan Collection: தமிழ் சினிமாவிற்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 10 வருடங்களாக பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலினின் சினிமா கேரியரில் அதிக வசூலை ஈட்டிய படம் மாமன்னன் தான் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மாமன்னன் படத்திற்கு இந்த அளவிற்கு வசூல் கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
பல ஆண்டு காலமாக தொடரும் சாதி வேறுபாட்டை வெளிப்படையாக பேசிய மாமன்னன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக 25 கோடி வசூல் கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
ஆனால் இதற்குப் பின்புலத்தில் உதயநிதி தான் முழுக்க முழுக்க இருக்கிறார். தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி இனிமேல் முழு நேர அரசியல்வாதியாகவே இருக்க போகிறார். அதனால் அவருடைய கடைசி படம் மாமன்னன் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.
ஆகையால் தான் போகிற போக்கில் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து கடந்த 29ஆம் தேதி ரிலீஸ் செய்தார். இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 25 கோடி வந்திருப்பதற்கு காரணம், அவரே இந்தப் படத்தை தயாரித்து சொந்தமாக டிஸ்ட்ரிபியூஷன் செய்ததுதான்.
Also Read: மாமன்னன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. உதயநிதியை ஓவர்டேக் செய்த மாரி செல்வராஜ்
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் கோலிவுட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், அவருடைய படத்தை எப்படி ரிலீஸ் செய்தால் வசூலை தட்டி தூக்கலாம் என்பது கூடவா தெரியாமல் இருப்பார்.
மாமன்னன் படத்திற்கு தமிழக திரையரங்குகளில் இருந்து ஷேர் மட்டும் 25 கோடி கிடைத்திருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை உதயநிதி நடித்த படங்களில் இந்தப் படம் தான் அவருடைய சினிமா கேரியரில் அதிக வசூலை ஈட்டிய படம். இதனால் போகும்போது பெரிய ஹிட் கொடுத்துவிட்டு கிளம்புகிறோம் என்ற பூரிப்புடன் உதயநிதி ஸ்டாலின் சந்தோசமாக இருக்கிறார்.
Also Read: அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு இருந்த அருள்நிதி.. உச்சகட்ட ராஜதந்திரம் இதான்