வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமன்னன் பட ரிலீஸ் க்கு வந்த புது சிக்கல்.. சுத்தி அடிக்கும் கர்மாவால் உதயநிதி படும் பாடு

Actor Udhayanidhi: சினிமாவிற்குள் உதயநிதி சும்மா பொழுது போக்கிற்காக வந்திருந்தாலும் போகப்போக கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு முழு நேர ஹீரோவாக களம் இறங்கி விட்டார். அதன்படி எத்தனையோ படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து இருந்தாலும் அரசியலில் சென்ற பிறகு நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து விட்டார்.

அதன் வழியாக கடைசியாக நடித்திருக்கும் படம் தான் மாமன்னன். இதில் இவருடன் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளனர். அத்துடன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

Also read: அட்வான்ஸை வாங்கிட்டு டேக்கா கொடுத்த அஜித் பட இயக்குனர்.. ஹிட் பட வாய்ப்பு இழந்த சோகத்தில் புலம்பும் உதயநிதி

ஆனால் அதற்கு இப்பொழுது ஒரு புது சிக்கல் வந்திருக்கிறது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று தயாரிப்பாளர் கே எஸ் அதியமான் கோர்ட்டில் கேஸ் போடுவதற்கு சென்றிருக்கிறார். அதற்கு காரணம் உதயநிதி “ஏஞ்சல்” என்ற படத்தில் கமிட் ஆகி 80 சதவீதம் நடித்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு மட்டும் நிலுவையில் இருக்கிறது. அதற்கு காரணம் உதயநிதி தான். அதாவது அந்த படத்திற்கான படப்பிடிப்பு 8 நாட்கள் தேவைப்படுகிறது. அதை அவர் நடித்துக் கொடுத்துவிட்டால் அந்த படம் முடிந்துவிடும். ஆனால் உதயநிதி கால் சீட்டை கொடுக்க மறுக்கிறார்.

Also read: மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

அதாவது மாமன்னன் தான் என்னுடைய கடைசி படம் என்று நான் அறிவித்து விட்டேன். அதனால் இந்த படத்தில் என்னால் நடிக்க வர முடியாது என்று கூறுகிறார். இதனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பயத்தினால் தான் கோர்ட் வரை சென்று மாமன்னன் படத்திற்கு தடை போட இருக்கிறார்.

இப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பட வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. தற்போது இவர் இழுத்தடிப்பதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்கு எடுத்த துருப்பு சீட்டு தான் மாமன்னன். இதை வைத்து உதயநிதியை பிடித்து விடலாம் என்று அவரை லாக் செய்ய இருக்கிறார்.

Also read: இவ்வளவு பிரச்சினையிலும் உதயநிதி செய்த விளம்பரம்.. நாலா பக்கமும் குவியும் காசு

Trending News