வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 படத்துக்கு உதயநிதி கொடுக்கும் ஓவர் டார்ச்சர்

கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல தடங்கல்களால் பாதியிலேயே நின்று போனது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு ஜோராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சங்கர் படு பிஸியாக இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இது ஊழல் மற்றும் லஞ்சம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also read:லைக்காவை வளைத்துப் போட்ட உதயநிதி.. சேனாதிபதியாக மாஸ் காட்டும் இந்தியன்-2 பட போஸ்டர்

அந்த வகையில் எழிலகம், எக்மோர் கவர்மெண்ட் அலுவலகம், திருப்பதி கவர்மெண்ட் அலுவலகம் போன்ற பல இடங்களிலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு நெஞ்சம் வாங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இது படத்தை தயாரிக்கும் உதயநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம் ஏனென்றால் தற்போது திமுகவின் ஆட்சி நடைபெற்று வருவதால் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் இதுபோன்று லஞ்சம் ஊழல் போன்றவற்றை காண்பிப்பது அவருக்கு ஏற்புடையதாக இல்லையாம்.

Also read:ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

இதனால் உதயநிதி சங்கமிடம் தனிப்பட்ட முறையில் இதுபோன்று காட்டுவது சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி சில மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். இந்தப் படத்தின் கதை கிழமை லஞ்சம் வாங்குவது பற்றி தான். இதன் முந்தைய பாகமும் அந்த கதை கருவை மையப்படுத்தி தான் வெளிவந்து வெற்றி பெற்றது.

அப்படி இருக்கும்போது இதில் எப்படி மாற்றம் செய்வது என்று தெரியாமல் ஷங்கர் திணறி போய் வருகிறாராம். மேலும் இதைப்பற்றி உதயநிதியிடம் எடுத்து கூறி சமாதானப்படுத்தும் வேலையிலும் அவர் இறங்கி இருக்கிறாராம். ஏற்கனவே படம் பல தாமதங்களுக்கு பிறகு இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் தயாரிப்பாளரின் தலையீடு வேறு ஆரம்பித்து விட்டதா என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read:உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

Trending News