செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படமாக போகும் தமிழக முதல்வரின் வாழ்க்கை.. பக்கா பிளானுடன் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்

தற்போது தமிழ் சினிமாவில் பல அரசியல் வரலாற்று தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கையும் படமாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான முயற்சியில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் அந்தத் திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை அடுத்து உதயநிதி மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக நடித்து வரும் அவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்கும் முடிவில் இருக்கிறார். பல நாட்களாகவே இதற்கான முயற்சியில் இருந்து வந்த அவருக்கு இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான வேலைகள் அனைத்தும் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக சமுத்திரகனி முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர், சர்க்காரு வாரி பட்டா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் டான் திரைப்படத்திலும் இவருடைய கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அவர் அஜித்தின் நடிப்பில் உருவாகிவரும் ஏகே 61 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் பயோபிக் திரைப்படத்திலும் இவர் நடிக்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News