புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் உதயநிதி, சிவகார்த்திகேயன்.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்

உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஆர்டிகல் 15 திரைப்படத்தின் ரீமேக்கான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அதில் நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் டான் என்றால் கத்தி வைத்திருப்பது, கம்பு சுற்றுவது கிடையாது. இங்கே அமைதியாக உட்கார்ந்து இருப்பவர்கள் தான் என்று கூறி உதயநிதியை கை காட்டி பேசினார்.

இதைக் கேட்ட உதயநிதி மேடையில் ஏறி சிவகார்த்திகேயனைப் பார்த்து அந்த டான் படத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்கெல்லாம் அந்த பட்டம் வேண்டாம் என்று அவரை கிண்டல் செய்யும் விதமாக கூறினார். இதனால் அங்கிருந்த அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி சிரித்தனர்.

மேலும் பேசிய உதயநிதி கேஜிஎப் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், அந்த படத்தின் தாக்கம் பலருக்கும் இன்னும் குறையவில்லை என்றும் கூறினார். அதன் பிறகு படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன், உதயநிதி இருவரும் மாறி மாறி கலாய்த்து, புகழ்ந்து பேசி இருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி கலந்து கொண்டார்.

அப்போது அந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறுவார். அதற்கு அவருடைய நண்பர் வேண்டாம் அங்கு சென்றால் பொய் கூற வேண்டும் என்று கூறுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன், உதயநிதியை பகிரங்கமாக கிண்டல் செய்வதாக கூறி வந்தனர்.

ஆனால் அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போது உதயநிதி அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தார். ஆனாலும் அதற்கு சில எதிர்வினைகள் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது உதயநிதி, சிவகார்த்திகேயனிடம் படு கேஷுவலாக நடந்து கொண்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News