சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தற்போது அமைச்சரவையில் மாற்றம் என அறிவிக்கும்போதே, இந்த சம்பவம் நிகழும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்தேறிவிட்டது. இன்று அமைச்சரவை மாற்றம் மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது
இந்த அமைச்சரவை மாற்றத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கே. ராமச்சந்திரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அமைச்சரவையில் கோவி செழியன், ராஜேந்திரன் சேர்க்க பட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி, நாசருக்கு மீண்டும் இடம் கொடுக்க பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறிப்பாக, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுபேர்த்துள்ளார். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டோம். இதுவும் ஒரு விவாத பொருளாக மாறி, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவியை கொடுப்பதற்காக நடத்தபட்ட ஒரு நாடகம் தான் இந்த அமைச்சரவை மாற்றம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
கொஞ்சம் ‛கேப்’ விட்டால் நாங்கள் பூந்துவிடுவோம் என முதல்வர் ஸ்டாலின் பாஜக க்கு எச்சரிக்கை விடுப்பது போல் பேசியதின் சூட்சமம் இப்போது தான் புரிகின்றது என்றும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பில் வேண்டுமென்றாலும் இருந்து கொள்ளுங்க. மக்களுக்கு நல்ல சேவைகள் வழங்கப்பட்டால் போதும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.