செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படத்தை பார்த்துட்டு உதயநிதி கொடுத்த ஆஃபர்.. SK-யை நம்பி போட்ட கெட்டப்பால் கவினுக்கு வந்த சிக்கல்

Kavin and Udhayanidhi: ஆரம்பத்தில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த கவினுக்கு தற்போது சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வசூல் அளவில் லாபம் பார்த்து தவிர்க்க முடியாத நடிகராக வந்து விட்டார்.

தற்போது இயக்குனர் எலன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக ஆதிதி போஹன்கர் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் சரோஜாதேவி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் கவினுக்கு அப்பாவாக நடிகர் லால் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். பொதுவாக கவின் படம் இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் விதமாக காதல் ரொமான்டிக் போன்ற விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இப்படத்திலும் காதலை தெறிக்க விட்டிருக்கிறார். அதனால் பார்ப்பவர்களுக்கு போர் அடிக்காத வகையில் படம் ஹிட் ஆகும் என்று நம்பிக்கையுடன் மொத்த டீமும் இருக்கிறார்கள்.

உதயநிதியை நிராகரித்த தயாரிப்பாளர்

இதனை தொடர்ந்து இப்படத்தை பார்த்துட்டு வந்த உதயநிதி படம் சூப்பராக இருக்கிறது என்று ஆஹா ஓஹோ என சொல்கிறாராம். அதிலும் இப்படத்தில் கவின் போட்டு இருக்கும் கெட்டப் அடி தூள் கிளப்பி இருக்கிறாராம். அதாவது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்டு ரசிக்கும்படி ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

அதே மாதிரி ஸ்டார் படத்திலும் கவின் பெண் வேடம் போட்டு நடித்திருக்கிறார். இப்படத்தை உதயநிதி தேர்தல் சமயத்தில் பிஸியாக இருந்த பொழுது கூட ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து படத்தை முழுவதுமாக பார்த்திருக்கிறார். பார்த்த பின்பு இந்த படத்தை நானே வாங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ரெட் ஜெயண்ட் பொருத்தவரை ஒரு படத்தை வாங்குகிறார்கள் என்றால் கடைசியில் தான் லாபத்தின் பங்கு கொடுப்பார்கள். அந்த வகையில் ஸ்டார் படத்திலும் அதே ஆஃபரை உதயநிதி கொடுத்திருக்கிறார். ஆனால் ஸ்டார் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு பணம் முதலில் வேண்டும் என்று சொல்லி உதயநிதியை நிராகரித்து விட்டார்.

தற்போது ஸ்டார் படம் வியாபாரமாகாமல் இருப்பதால் கவினுக்கு இது ஒரு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இதனால் தான் இன்னும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கூட ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு தள்ளாடி கொண்டு வருகிறார்கள்.

Trending News