வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அண்ணாமலை இருக்கிற கட்சியில இருக்கிறது அசிங்கம்.. தமிழன், திராவிடன் பேர் போதும்.. எஸ்.வி.சேகர் பேட்டி

பாஜக ஓட்டு எனக்குத் தேவையில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையலாம். எந்தக் கட்சியில் இருந்தும் எந்தக் கட்சிக்கு வேண்டுமாமாலும் மாறலாம். ஆட்சியில் பங்கேற்று அடுத்து ஆட்சி மாறினாலும் வேறு கட்சிக்கு போகலாம். இது ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு என பொதுவாகவே சொல்வர்.

இப்படி சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் பொருத்தமானவர் நடிகர் எஸ்.வி.சேகர் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த அவர், அங்கிருந்து காங்கிரஸுக்கு சென்றார். அதில் மனஸ்தாபம் கொண்டு அங்கிருந்து மீண்டும் திமுகவுக்கு வந்தவர் அதிரடியாக பாஜகயில் சேர்ந்தார்.

பாஜகவில் இணைந்து சில ஆண்டுகளாக அங்கிருந்த வண்ணமே பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழக பாஜக அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் விமர்சித்து வருகிறார். இதனால் இவர் சேம் சைடில் கோல் போடுகிறாரே என பலரும் கேள்வி எழுப்பினர்.

அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகர்

இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலை பற்றி கேட்டதற்கு, ’’அந்தப் பெயர் கேட்டாலே காதிலேயே விழ மாட்டிங்குது என்று கலாய்த்தார். மேலும், நான் பிஜேபியில் இருந்து விலகிவிட்டேன். அக்கட்சியில் நான் இல்லை. ஏனென்றால் அண்ணாமலை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் அரசியல் தரம்கெட்டுத்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட அரசியலில் இருக்க நான் விருப்பப்படவில்லை. மோடி அழைத்தார் என்பதால் நான் பிஜேபிவில் சேர்ந்தேன். அப்போது ஐந்து, ஆறுமுறை என்னை கட்சியைவிட்டு தூக்க அண்ணாமலை நினைத்து முயற்சித்தார். கட்சித் தலைமையிடத்திற்கும் சென்று அவர் காய் நகர்த்தினர். அவரால் ஒன்னும் பண்ணமுடியல. அவர் ஆனால் என் உறுப்பினர் பதிவு முடிந்துவிட்டது. இப்படி அண்ணாமலை போன்ற மோசமான தலைவர்கள் இருக்கக்கூடிய கட்சியில் இருப்பது அசிங்கம் என்று சொல்லி நான் எனது உறுப்பினர் பதிவை புதுப்பிக்கவில்லை.

நான் ஒரு இந்திய குடிமகனாக, தமிழனாக, திராவிடனாக இருந்துவிட்டுப் போறேன். பாஜக ஓட்டு எனக்குத் தேவையில்லை. என் ஓட்டுத்தான் பாஜகவுக்கு தேவை. நான் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்தவன். அண்ணாமலை கவுன்சிலராக கூட ஜெயிக்கவில்லை. அதைப்பற்றி எனக்கென்ன. அவர் தான் என்னை கும்பிடனும். நான் ஏன் அவரை கும்பிடனும். அவர் காசு கொடுத்து தன் பெயரை பரப்புகிறார். 2026 ல் ஏற்கனவேர் இருந்த சீட்டில் பாதி போயிரும்’’ என்று கடுமையாக விமர்சித்தார்.

Trending News