ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

Tamil Actor: விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்த உடன், ‘இது எல்லாம் ஒரு மூஞ்சியா, இவரெல்லாம் ஏன் நடிக்க வருகிறார்’ என ஏளனம் செய்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பல பேர். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று உச்ச நடிகராய் ஆலமரம் போல் வளர்ந்ததெல்லாம் வேற கதை.

இதைப் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிலேயே விஜய் நடிக்க வந்ததை பற்றி எழுதியிருந்தனர். அப்பா மூலம் நடிக்க வந்துவிட்டார் இல்லை என்றால் இந்த முகம் சினிமாவில் எடுபடாது என்று கூறியிருந்தனர். இவரை போலவே அப்பா மூலம் நடிக்க வந்து விட்டார் என பிரபல நடிகர் ஒருவரை ஆரம்பத்தில் அசிங்கப்படுத்தி வந்தனர்.

Also Read: மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

தலையில் முடி இல்லை, மீசையும் அழகாக இல்லை என கேவலமாக சித்தரிக்கப்பட்டார் நடிகர் ஒருவர். தமிழ் சினிமாவில் அப்பா பெரிய ஆளாக இருந்தால் யாரு வேணாலும் நடிக்க வந்து விடலாம் என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால் நான் அப்பா மூலமாக நடிக்க வந்தவன் இல்லை என்பதை நிரூபித்து காட்டி ஜெயித்தவர் தான் பகத் பாசில்.

இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்டி விட்டிருப்பார். அது மட்டுமல்ல பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த உலகநாயகனின் விக்ரம் படத்தில் அமர் ஏஜென்ட் ஆக தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டினார். அதுமட்டுமல்ல உதயநிதி, வடிவேலு நடிப்பில் வெளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் எதிர்மறை கேரக்டரில் பகத் பாசில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி அசத்தினார்.

Also Read: கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

தமிழில் விஜய் எப்படி ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்து தற்போது உச்சம் பெற்று இருக்கிறாரோ, அதேபோல தான் பிரபல இயக்குனர் பாசில் அவர்களின் மகனாக பகத் பாசிலும் முடி இல்லாமல் சொட்ட தலையுடன் கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்டார்.

இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீப காலமாகத்தான் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர். குறிப்பாக நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றைக் கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Also Read: ஒரே படத்தால் எல்லா கடனையும் அடைக்கும் நடிகர்.. பழைய படங்களை தூசி தட்டி வெளியிட காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்!

Trending News