செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

68 வயதில் செய்யக்கூடாததை செய்யும் கமல்.. படாதபாடு பட்டதால் வந்த வினை

உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட்டான நிலையில், தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இத்திரைப்படத்தில் நடித்து வந்த கமலஹாசன், அத்திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில் நிப்பாட்டப்பட்டு, மீண்டும் இத்திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் கமலஹாசன் .

இதனிடையே 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர் கதையாகவே இந்தியன் 2 திரைப்படம் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படத்தின் கதையாசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியன் 2 திரைப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலஹாசனுக்கு ஹைடெக் மேக்கப் போடப்படுகிறது.

Also Read : 50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்

இதன் காரணமாக அவர் சாப்பிடாமல், வெறும் ஜூஸ் மட்டும் குடித்து பட்டினியுடன் இத்திரைப்படத்தில் தனது உடலை வருத்திக் கொண்டு நடித்து வருவதாக தெரிவித்தார். வாயை அசைத்து சாப்பிடும்போது அந்த மேக்கப் களைந்து விடும் என்பதால் இவ்வாறு கமலஹாசன் செய்து வருகிறார். அவர் அப்படி தனது உடலை குறைத்து நடிப்பதை பார்ப்பதற்கே தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.

இந்நிலையில் கட்டாயம் இந்தியன் 2 திரைப்படம், இந்தியன் திரைப்படத்தை விட சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் இத்திரைப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரியையும் கூறி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜெயமோகன். இந்தியன் திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்தில் சில காட்சிகளை காண்பிக்கப்பட்டு 90 ஆம் காலக்கட்டத்துடன் கதை நகரும்.

Also Read : கமலஹாசன் தூவிய விதை.. தாலி நோ, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஊறிப்போன 8 ஜோடிகள்

ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தில், இந்தியன் திரைப்படத்தில் காட்டப்படாத இந்தியன் தாத்தாவின் தந்தையை காட்டும் வகையில் இப்படத்தின் கதை நகரும் என ஜெயமோகன் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரத்திற்கு மிகவும் முன்னாடி இருந்த காலகட்டத்தை இந்தியன் 2 வில் காட்சிப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்தியன் திரைப்படத்தில் தந்தை மகனுக்குமான சண்டை, மோதல் உள்ளிட்டவை இருக்கும்.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் சில சம்பவங்களை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக ஜெயமோகன் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெயமோகனின் ஒன் லைன் ஸ்டோரியை கேட்கும் போது இரண்டிற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் கமலஹாசன் நடித்து வருகிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

Also Read : கமலஹாசன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை

Trending News