புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோல்வியை ஏத்துக்க முடியாமல் கட்டுக்கதை அவிழ்த்து விடும் லோகி.. கிழித்து தொங்கவிடும் அந்தணன்

Anthanan about lokesh: சினிமா தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ இயக்குனர்கள் பிரம்மாண்டமான கதைகளையும், உண்மை சம்பவங்களையும் எடுத்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் புதுவிதமான ஸ்டோரியும், சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளையும் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்றால் அது லோகேஷ் தான்.

அப்படிப்பட்ட இவர் மற்ற இயக்குனர்களை மாதிரி சும்மா சாதாரணமாக ஒரு படத்தை எடுத்து அதில் வெற்றி பார்ப்பது மாதிரி கிடையாது. இவர் எடுக்கக்கூடிய படங்களில் ஏதாவது ஒரு தேடலை வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கனெக்டிங் காட்சியை வைத்து விடுவார். அதனாலேயே லோகேஷ என்றால் LCU கதை என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் எடுத்த லியோ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் அதை சரியாக செய்தாரா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது லியோ படத்தின் முதல் பகுதி திரையரங்கை தெறிக்க விடும் அளவிற்கு தரமான சம்பவத்தை செய்திருப்பார்.

ஆனால் அப்படியே இரண்டாம் பகுதியும் எதிர்பார்த்தால் ரொம்பவே ஏமாற்றமாக அமைந்துவிட்டது. அதை பார்க்கும் பொழுது இது லோகேஷ் தான் எடுத்தாரா என்ற சந்தேகம் உண்டாக்குற அளவிற்கு இருந்தது. அதனால் இப்படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் இவர் இதுவரை எடுத்து வைத்த பெயர் மொத்தமும் காலியாகிவிடும் என்பதால் தற்போது அனைத்து சேனல்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.

அதில் இரண்டாம் பகுதியில் வரும் பிளாஷ்பேக் உண்மையானது இல்லை. இது மன்சூர் அலிகான், கௌதம் மேனனை ஏமாற்றுவதற்காக அவர் சொல்லப்பட்ட ஒரு கதை அவ்வளவுதான். இதில் தான் நான் உண்மையான ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறேன் என்று ஒவ்வொரு சேனலிலும் போய் பேட்டி அளித்து வருகிறார். அத்துடன் நான் வேற மாதிரி நினைச்சு எடுத்தேன். ஆனால் அது இப்படி அமைந்துவிட்டது என்று சும்மா கட்டுக் கதையாக அவிழ்த்து விட்டு வருகிறார்.

இவர் சொல்வதை பார்த்தால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இந்த மாதிரி சொல்லிக் கொண்டு வருகிறார் போல் தெரிகிறது. இதுக்கு பேசாம லியோ ஓடின தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைத்து இவர் பேசிய வீடியோக்களை போட்டு விட்டு இருக்கலாம். படிச்சவனோ, பாமரன்னோ ஒரு படத்தை பார்க்கும் பொழுது அது அப்படியே அவர்களுக்கு புரிந்து விடனும். அதை விட்டுட்டு சும்மா தலையை சுத்தி மூக்கை தொடர வேலையெல்லாம் வச்சுக்கிட்டா மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று லோகேஷை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டு வருகிறார் வலைபேச்சு அந்தணன்.

Trending News