சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

செவுத்துல அடிச்ச பந்து போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன் போல் மாற முடியாததால் வேதனை

விஜய் டிவியிலிருந்து சினிமாவிற்கு சென்ற பலரும் தற்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அதிலும் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து, அதன் பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது கோலிவுட்டிங் டாப் இளம் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரை போன்றே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியலில் அறிமுகமாகி, அதன் பிறகு சரவணன் மீனாட்சி 3-ல் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். இவரும் விஜய் டிவி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

Also Read: 500 எபிசோடு தாண்டி கிளைமாக்ஸ் எட்டிய விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. திடீர் முடிவால் ஏற்பட்ட ஏமாற்றம்

அதுமட்டுமல்ல பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் களமிறங்கினார். அதன் பிறகு சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ரியோ ராஜ், 2017 ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தில் கவின், சஞ்சய் தத் உடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திலும், அதன் பிறகு அடுத்த ஆண்டு பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

இருப்பினும் இந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் ரியோ தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இருப்பினும் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்காததால், செவுத்துல அடித்த பந்து போல் மறுபடியும் விஜய் டிவிக்கே வந்துவிட்டார்.

Also Read: அட்வகேட்னா நிறைய பொய் சொல்லனுமே.. ஜூலியை சீரியலில் பொறுக்கி போட்ட விஜய் டிவி

மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் 9 சீசனை தற்போது பிரியங்கா உடன் ரியோ ராஜ் தொகுத்து வழங்குகிறார். வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்திற்கு பதில் ரியோ ராஜ் தான் தொகுத்து வழங்கப் போகிறார். இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விலகுவதற்கு காரணம், அவர் நிறைய படங்களில் பிஸியா நடித்து வருகிறார். அதிலும் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால்தான் மாகாபா சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி நடந்த விலகி, அவருக்கு பதில் ரியோ என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து மறுபடியும் சின்னத்திரைக்கே வந்த ரியோ ராஜ் பட வாய்ப்பு கிடைக்காமல் வேதனையில் இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனை தனுஷ் அனிருத் உள்ளிட்டோர் சினிமாவில் தூக்கி விட்டது போல், இவரையும் நம்பி தயாரிப்பாளர்கள் தைரியமாக படம் எடுக்க முன்வர வேண்டும்.

Also Read: கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

Trending News