மனோபாலா தனது 69 வயதிலும் சினிமா மேல் இருந்த ஆசையால் சினிமாவை விடாமல் அவரை தேடி வரும் படங்களில் நடிப்பதும், அத்துடன் யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதும் இதுபோன்று தொடர்ந்து இவருடைய பங்களிப்பை அர்ப்பணித்து வந்தார். இப்படி ஓய்வில்லாமல் சினிமாவை சுற்றியே இவருடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் இவருக்கு சில காலமாக கல்லீரல் பிரச்சனை இருந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
அதே நேரத்தில் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். பிறகு திடீரென்று இவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் இன்று உயிரிழந்தார். ஆனால் இவர் கடைசியாக மயில்சாமி இறப்பின் போது அதை இவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதில் மயில்சாமியை பற்றி இவர் கூறியது என்னவென்றால் நாங்கள் இருவரும் உயிர் தோழன் ஆக இதுவரை இருந்து வந்தோம்.
Also read: மனோபாலா-வை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய நடிகர்.. இயக்குனராக வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா
நாங்கள் இருவரும் தினந்தோறும் சந்தித்து பேசிக் கொள்வோம். சில விஷயங்களை நான் என்ன சொன்னாலும் அவன் கேட்கவே மாட்டான். அவன் இஷ்டத்துக்கு நினைத்த நேரத்தில் நினைத்த சாப்பாட்டை சாப்பிடுவதும், நிறைய கோயிலுக்கு நேரம் காலம் கூட பார்க்காமல் போவதும். இப்படி அவனுக்கு தோன்ற விஷயத்தை மட்டும் தான் செய்வான். இதை மட்டும் யார் என்ன சொன்னாலும் காது கொடுத்து கூட கேட்கவே மாட்டான் என்று மனோபாலா, மயில்சாமியின் இறப்பை பற்றி மிகவும் மனமுடைந்து கூறினார்.
அத்துடன் அவன் இறந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் அவன் பக்கத்து தெருவில் தான் இருக்கிறேன். ஆனாலும் அவன் இறந்ததும் என்னால் அவனை போய் பார்க்க முடியவில்லை. அவன் முகத்தை நான் எப்படி பார்ப்பேன் என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனால் கண்டிப்பாக நான் இறுதி சடங்கில் பங்கேற்கவும் மாட்டேன் என்று கூறியிருந்தார்.
Also read: ஒரு சீன் வந்தாலும் மனதில் நின்ற மனோபாலாவின் 5 படங்கள்.. நாய் சேகரை வெளுத்து வாங்கிய இன்ஸ்பெக்டர்
இப்படி இவர் சொன்னதை பார்க்கும்போது இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பின் அடையாளத்தை காட்டி இருக்கிறது. அதன்பிறகு மயில்சாமியின் இறப்பிற்கு பிறகு மனதால் மிகவும் நொந்து போன மனோபாலா கொஞ்ச நாளாகவே எதிலும் ஆர்வம் காட்டாமல் ஏதோ பறி கொடுத்தது போலையே சுற்றி வந்தார். அதனால் என்னமோ நண்பனை விட்டு பிரிய முடியாமல் அவர் கூடவே போய் விடலாம் என்று முடிவெடுத்து விட்டார்.
மயில்சாமி இறந்து இரண்டு மாதத்திலே மனோபாலாவும் இறந்து விட்டார் என்று கேட்கும் பொழுது உண்மையிலேயே மயில்சாமி நண்பன் படுகிற கஷ்டத்தை பார்க்க முடியாமலே அவருடனே கூட்டி போய்விட்டார், என்று மனோபாலா வுக்கு இன்று இரங்கல் தெரிவிக்க வந்த சினிமா வட்டாரத்தில் உள்ள பலரும் இப்படித்தான் பேசி வருகின்றனர். அத்துடன் இவருடைய உண்மையான நட்புக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
Also read: இயக்குனராக வெற்றி பெற்ற மனோபாலாவின் 6 படங்கள்.. காங்கேயனாக கால் பதித்த ரஜினி