வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி

Jailer-Leo: இப்போது சோசியல் மீடியாவை திறந்தாலே லியோ மற்றும் ஜெயிலர் படங்களுக்கு இடையே இருக்கும் ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் ஜெயிலர் படத்திலிருந்து அடுத்தடுத்து முதல் மற்றும் இரண்டாம் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதில் சமீபத்தில் வெளியான ஹுக்கும் பாடல் தான் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் இடத்திற்கு போட்டி போட்ட விஜய் உட்பட பல நடிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த அந்த பாடல் வரிகள் இப்போது பல விவாதங்களையும் ஆரம்பித்து வைத்துள்ளது.

Also read: லோகேஷின் எல்சியுவில் இணையும் அஜித்.. நா பண்ற பத்து படங்களில் நீங்க இல்லன்னா எப்படி AK

இந்த விவகாரம் காட்டுத் தீயாக பற்றி எரியும் நிலையில் இதை கேள்விப்பட்ட விஜய் தற்போது அனிருத் மேல் செம காண்டில் இருக்கிறாராம். ஏனென்றால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான லியோ பட முதல் சிங்கிள் வைரல் ஆவதற்கு பதிலாக சர்ச்சையில் தான் முடிந்தது. அதன் காரணமாகவே அப்பாடல் பெரிய அளவில் கவனம் ஈர்க்காமல் போனது. மேலும் அதை முறியடிக்கும் வகையில் காவாலா பாடல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Also read: சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது

அதைக் கூட பொறுத்துக் கொண்ட விஜய் இரண்டாம் பாடலை பார்த்து தான் அப்செட் ஆகிவிட்டாராம். இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று அனிருத் கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில் இது குறித்து அவரிடம் கேட்டிருக்கிறார். இப்படி கத்தி தன் பக்கம் நேரடியாக திரும்புவதை அனிருத் கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

ஏனென்றால் ஜெயிலர் மூலம் சூப்பர் ஸ்டாரை மனம் குளிர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் ரொம்பவும் உற்சாகமாக பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார். தற்போது விஜய் இப்படி கேட்டவுடன் அனிருத் ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்திருக்கிறார். இருப்பினும் லியோ பாடல் எடுபடாமல் போனதாலும் ஜெயிலர் தன் பவரை காட்டி விட்டதாலும் விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.

Also read: கேமை மாற்ற வந்த ஹீரோ, கதி கலங்க வைத்த போஸ்டர்.. ப்ராஜெக்ட் கே-வால் பிரபாஸுக்கு வந்த சோதனை

Trending News