ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குணசேகரன் கேரக்டரை வள்ளலாக மாத்தி குளோஸ் செய்த எதிர்நீச்சல்.. மருமகள்களை ஆட்டிப் படைக்க வரும் அண்ணன்

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் நடித்த குணசேகரன் என்று சொல்வதை விட தினமும் வீட்டில் ஒரு நபராக பார்த்து பழகி வந்தவர் என்பது தான் கரெக்டாக இருக்கும். அந்த அளவிற்கு குணசேகரன் கதாபாத்திரம் பார்ப்பவர்களுடன் ஒன்றிணைந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு யார் நடித்தாலும் ஈடாகாது.

அதனால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் தம்பிகளுக்கு மாற்றி கொடுத்து வள்ளலாக அவரின் கேரக்டரை க்ளோஸ் செய்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த ஆடிட்டர், உங்க அண்ணன் அனைத்து சொத்துக்களையும் உங்கள் பெயரில் எழுதிவிட்டார். அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு சொத்தையும் எழுதி வைக்கவில்லை.

Also read: வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

எல்லாமே தம்பி, தங்கை, அம்மாக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரொம்பவே உடைந்து போய் தம்பிகள் அனைவரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். அத்துடன் அம்மாவும் பெரியவனே நீ இல்லாமல் நாங்க எப்படி இருக்க போகிறோம் என்று ரொம்பவே வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்.

அதன் பின் குணசேகரன் எப்பொழுது வீட்டிற்கு திரும்பி வருவார் என்று நாடி ஜோசியம் பார்க்கப் போகிறார்கள். அங்கே ஜோசியக்காரர் இனி குணசேகரன் திரும்பி வர மாட்டார். அதற்கு பதிலாக அவருடைய அண்ணன் ஒருவர் இருக்கிறார் அவர் கூடிய சீக்கிரம் உங்களிடம் வந்து சேர்வார் என்று கூறுகிறார்.

Also read: காணாமல் போகும் ஆதி குணசேகரன்.. மாரிமுத்து இல்லாததால் தத்தளிக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்

உடனே ஞானம் மற்றும் கதிர் அப்படி எங்களுக்கு யாரும் எந்த அண்ணனும் கிடையாது. எங்களுக்கு இருக்கும் ஒரே அண்ணன் குணசேகரன் தான் என்று கூறுகிறார். அதற்கு ஜோசியர் இல்ல உங்களுக்கு மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார் என்று சொல்லும் போது குணசேகரனின் அம்மா மட்டும் கொஞ்சம் திருட்டு முழியுடன் முழிக்கிறார்.

அப்படி பார்க்கையில் ஆதி குணசேகரனின் அண்ணன் கதாபாத்திரம் புதிதாக என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்பது தெரிகிறது. அந்த வகையில் குணசேகரன் மாதிரி வீட்டில் இருக்கும் மருமகள்களை ஆட்டிப் படைக்கப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: கடைசி காட்சியில் மிரட்டி விட்ட குணசேகரன்.. அடுத்தடுத்து தொழிலதிபராக மாறும் மருமகள்கள்

Trending News