உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பல சாதனைகள் நிகழ்ந்துள்ளது. அவற்றுள் இன்றுவரை சில சாதனைகளை எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களாலும் முறியடிக்கப்படவில்லை.அவற்றுள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்களின் சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் இருப்பவற்றில் சில.
சச்சின் டெண்டுல்கர்: கிட்டத்தட்ட 26 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 62 மேன் ஆப் தி மேட்ச் டைட்டில் கார்டு வென்றுள்ளார். இது இன்று வரை எவராலும் முறியடிக்கப்படவில்லை. அவருக்குப்பின் சனத் ஜெயசூர்யா 48 மேன் ஆப் தி மேட்ச் டைட்டில் வென்றுள்ளார்.
சமிந்தா வாஸ்: இவர் ஒருமுறை ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டுகளும் அடங்கும். இதுவே இன்று வரை ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு ஆகும். அவருக்கு பின் சாகித் அப்ரிடி 12 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீழ்த்தியது இரண்டாமிடத்தில் உள்ளது.
ரிக்கி பாண்டிங்: ஆஸ்திரேலிய அணியின் ஒரு தலை சிறந்த கேப்டன். மொத்தமாக இவர் விளையாடியது 375 போட்டிகள். அதில் 230 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இரண்டு முறை உலக கோப்பையை வென்று தந்த ஒரே கேப்டன் ரிக்கி பாண்டிங் தான். இவரது இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
மிஸ்பா உல் ஹக்: மிஸ்பா உல் ஹக் இதுவரை 162 போட்டிகள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். மொத்தமாக 5122 ரன்களை குவித்துள்ளார். ஆனால் இவர் இதுவரை ஒரு சதத்தை கூட பூர்த்தி செய்ததில்லை. இதுவும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. இதுவரை இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை.
ரோகித் சர்மா: 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்தார். அதில் 33 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். 4 ரன்களில் இருக்கும்போது இலங்கை அணியினர் இவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டனர். அதன்பின் அவர் 260 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இதுவரை இச்சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
ஹெர்செல் கிப்ஸ்: கிப்ஸ் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன். இவர் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 6 பந்துகளுக்கு, 6 சிக்ஸர்கள் விளாசி, ஒருநாள் போட்டியில் ஒரு ஓவர்களுக்கு 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இது எவராலும் இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் ரவி சாஸ்திரி மற்றும் கேரி சோபர்ஸ் இருவரும் 6 சிக்சர்கள் அடித்து உள்ளனர். ஆனால் அவர்கள் செய்தது முதல்தர போட்டிகளில்.
யுவராஜ் சிங்: 2007ஆம் ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதுவே 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஹெர்செல் கிப்ஸ். நிகழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்: இந்திய அணிக்காக இதுவரை 340 போட்டிகளில் ஒபனராக களமிறங்கியுள்ளார். மொத்தமாக இவர் 2016 பவுண்டரிகளை விளாசிய உள்ளார். இதுவரை இவரால் அடிக்கப்பட்ட பவுண்டரிகலே அதிகம். இவரால் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.