கிரிக்கெட் போட்டிகளில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைக் கூறலாம். கடைசி நேரத்தில் போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிக அதிகம். கிரிக்கெட் போட்டிகளை ஐசிசி உலகளாவிய தரத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறது. சில கிரிக்கெட் போட்டிகளில் நம்ப முடியாத மாற்றங்களும் முடிவுகளும் நடைபெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஆச்சரியமான நிகழ்வுகளை இதில் பார்க்கலாம்.
விருத்திமான் சாஹா: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடுபவர் சாஹா. இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கிளப் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டியில் வெறும் 20 பந்துகளில் 104 ரன்களை விளாசியுள்ளார். இதில்14 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
அனில் கும்ப்ளே: பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த 10 விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக வீழ்த்தி “ஒன் மேன் ஷோ” வாக மேட்சை முடித்து வைத்தார்.
கிறிஸ் கேல்: சின்னசாமி ஸ்டேடியத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் சார்பாக கிறிஸ் கேல் 175 ரன்கள் விளாசினார். இதுவே இன்று வரை ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஸ்கோர் ஆகும்.
பிரணவ் தனவேட்:16 வயதுக்குட்பட்டோருக்கான நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரணவ் தனவேட் என்னும் வீரர் 1009 ரன்கள் குவித்த அசத்தியுள்ளார். இவருக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் விருந்து அளித்து கௌரவித்தார்.