சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

சத்தமே இல்லாமல் வெளியாகி மரண ஹிட் ஆன 7 படங்கள்.. மாஸ் பண்ணிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை கிளப்பி தோல்வி அடைந்த படங்களும் உண்டு. அதே சமயத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளி வந்து பின்னர் மெகா ஹிட்டான படங்களும் சரித்திரத்தில் உண்டு.

சேது

Sethu-full-movie-online
Sethu-full-movie-online

நடிகர் பாலாவால் விக்ரமுக்கு மிகப்பெரிய பிரேக் கிடைத்த திரைப்படம். இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது உள்ளது. ஆனால் அதற்கு முன்பு விக்ரம் ஒரு தோல்வி நடிகர் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவுமே இல்லை. பின்னர் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.

முழு படம் பார்க்க: Click here

அறிந்தும் அறியாமலும்

arinthum-ariyamalum-full-movie-online-cinemapettai
arinthum-ariyamalum-full-movie-online-cinemapettai

கொஞ்சம் பிரபலமான ஆர்யா கொஞ்சம் கூட பிரபலமே இல்லாத தெலுங்கு நடிகர் என கேங்ஸ்டர் படமாக உருவாகியது அறிந்தும் அறியாமலும். விஷ்ணுவர்தன் என்ற ஒரு இயக்குனரை தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக, படம் வெளியான பின்னர் கொண்டாட வைத்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். படம் செம ஹிட்.

முழு படம் பார்க்க: Click here

சூது கவ்வும்

Soodhu-Kavvum
Soodhu-Kavvum

நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி என அனைவருமே புதுமுகம். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது சூது கவ்வும். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு வசூல் ரீதியாகவும் நல்ல படமாக அமைந்தது.

முழு படம் பார்க்க: Click here

பீட்சா

pizza-full-movie-online
pizza-full-movie-online

திருட்டுத் தனத்தை இப்படிக்கூட செய்யலாமா என திகில் கலந்த கதையில் மிகவும் சுவாரசியமாக தனது முதல் படத்தை கொடுத்தவர் நாளைய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இந்த படமும் இணைந்தது. பல மொழிகளிலும் பீட்சா படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு படம் பார்க்க: Click here

துள்ளுவதோ இளமை

7-thulluvatho-ilamai-full-movie-online
7-thulluvatho-ilamai-full-movie-online

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என ஆரம்பத்திலேயே கேவலப்பட்டவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனுடைய விடாமுயற்சியால் தம்பி தனுஷ் தற்போது உலகம் முழுவதும் அறிந்த ஹீரோவாக மாறி விட்டார். அதற்கு அச்சாரமாக அமைந்ததே இந்த படம்தான். பள்ளிப் பருவக் காதலை உணர்ச்சிபொங்க காமம் கலந்து இளைஞர்களை கவரும் வகையில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த துள்ளுவதோ இளமை.

முழு படம் பார்க்க: Click here

சித்திரம் பேசுதடி

நரேன் என்ற நடிகரை தமிழ் சினிமாவுக்கு பிரபலமாக்கியது மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படம் தான். யாருமே எதிர்பாராத வகையில் இந்த படம் வெளியாகி சிறிது நாட்கள் கழித்து மிகவும் வைரல் ஹிட் ஆனது. அந்த வருடத்தில் வெளிவந்த பெஸ்ட் திரைப்படம். பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் போல் மிஸ்கின் நினைத்தாலும் மீண்டும் இயக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

முழு படம் பார்க்க: Click here

சதுரங்க வேட்டை

Sathuranga-vettai-full-movie-online
Sathuranga-vettai-full-movie-online

சதுரங்க வேட்டை நகைச்சுவை கலந்த திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் எச். வினோத், கதாநாயகன் நடராஜன் சுப்ரமணியம். மனோபாலா இப்படத்தை தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களை பற்றி தோலுரித்து காட்டியது. எதிர்பார்க்காமல் ஹிட் அடித்த முக்கியமான படம் சதுரங்க வேட்டை.

முழு படம் பார்க்க: Click here

Trending News