புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அத்தி பூத்தாற் போல் விஜய் Farewell-க்கு வரும் கெஸ்ட்.. குஷியில் கொம்பு முளைத்து திரியும் தளபதி 69 டீம்

சினிமாவிற்கு தளபதி 69 படத்தோடு எண்டு கார்டு போடுகிறார் விஜய். இந்த படமும் 90% முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைகிறது. இதனால் விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

வெகு சிறப்பாக கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள். அதற்காக பல வி விஐபிகளையும், செலிபிரிட்டிகளையும், அழைத்துள்ளனர். இந்த விழா விஜய்க்கு பிடித்த இடமான பனையூரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் அரசியல் சம்பந்தமான அனைத்து மீட்டிங் மற்றும் பேச்சு வார்த்தை எல்லாவற்றையும் பனையூரில் வைத்து தான் நடத்தி வருகிறார். இப்பொழுது தளபதி 69 படமும் அங்கே தான் சூட்டிங் நடந்து வருகிறது. முழுவதுமாக செட் போடப்பட்டு கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இந்த ஃபேர்வெல் பார்ட்டியில் முதல் விருந்தினராக கலந்து கொள்கிறார் அஜித். அவரது வருகைக்காக காத்திருந்துதான் அந்த விழா நாளையும் தேர்வு செய்ய உள்ளனர். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இதில் கலந்து கொள்ள இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் வருகையை அறிந்த படக்குழுவினர் திக்குமுக்காடி வருகிறார்கள். அஜித் தற்சமயம் குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் இருக்கிறார். அவரைப் போலவே இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். பாலிவுட்டில் இருந்தும் ஜாக்கிசரஃப் போன்ற முக்கிய நடிகர்கள் வருகிறார்கள்.

அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி போன்ற அனைவருக்கும் அழைப்பு போயிருக்கிறது. யார் யார் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அஜித் மட்டும் உறுதியாக ஃபேர்வெல் பார்ட்டிக்கு வருகிறார். இதனால் மொத்த சூட்டிங் ஸ்பாட்டும் சந்தோசத்தில் கொம்பு முளைத்து திரிகிறது.

Trending News