வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

25 வருடத்திற்கு பின் தலைக்காட்டிய உங்கள் சாய்ஸ் பெப்சி உமா.. அப்ப பார்த்த மாதிரி அப்படியே இருக்காங்களே

90களில் டாப் ஹீரோயின்களுக்கு சமமான ரசிகர் கூட்டத்தை தனக்கென வைத்திருந்தவர் தொகுப்பாளினி பெப்சி உமா. 25 வருடங்களுக்கு பிறகு தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தலைக்காட்டி இருக்கும் பெப்சி உமாவின் சமீபத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவுகிறது.

இதில் பெப்சி உமா, அப்ப மாதிரியே அப்படியே இருப்பதால் இவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். இவர் சன் டிவியின் உங்கள் சாய்ஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியை அதுவும் 15 ஆண்டுகள் ஒருவரே தொகுத்து வழங்கி உள்ளார்.

Also Read: மேடம்! இந்த ஒரு படம் மட்டும்.. சரி நீ அங்குட்டு போ என பெப்சி உமா நிராகரித்த பிரபல ஹீரோக்களின் பட லிஸ்ட்

இதில் ரசிகர்களுடன் தொலைபேசியில் உரையாடும் போது அவர் எதார்த்தமாக சொல்லும் ‘ஓ’ என்ற வார்த்தை அனைவருக்கும் அவ்வளவு பிடிக்கும். எந்த பந்தமும் இல்லாமல் ரசிகர்களுடைய தோழி போன்றே உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பேசுவார். அதிலும் இவருடைய கம்பீரக் குரல், சிரிப்பு, அழகு இவற்றை வர்ணிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு பெப்சி உமாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் 90களில் இருந்தது. இவர் இந்த ஒரு நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அதனாலேயே அவர் உங்கள் சாய்ஸ் பெப்சி உமா என்று, அந்த நிகழ்ச்சியின் பெயரோடு அவரோட பெயரும் இணைந்து விட்டது.

Also Read: அந்தரங்க வீடியோவுக்கு 15 லட்சம் கேட்ட சன் டிவி நடிகை.. ஆனாலும் தில்லு ஜாஸ்தி

அதன் பிறகு 25 வருடங்களாக எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் பெப்சி உமா, சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் இவருடன் செய்தி வாசிப்பாளர் ரத்னா, சன் டிவியின் சமையல் நிகழ்ச்சிகளை 90களில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் விஜய் பாரதி ஆகிய 2 பிரபலங்களும் இணைந்து இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தில் பல வருடங்கள் கழித்து பெப்சி உமாவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். அவர் மறுபடியும் உங்கள் சாய்ஸ் போன்றே வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் ஏங்குகின்றனர்.

பெப்சி உமாவின் சமீபத்திய புகைப்படம்

pepsi-uma-cinemapettai
pepsi-uma-cinemapettai

Also Read: சுவாரசியம் குறைந்து காணாமல் போன 5 தொகுப்பாளினிகள்.. கிசுகிசுக்கப்பட்டதால் வெளியேறிய பிரபலம்

Trending News