ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இந்த 6 நடிகர்களுக்கு இருக்கும் தனித்திறமைகள்.. மங்காத்தா அஜித்துக்கே டஃப் கொடுக்கும் ரக்க்ஷன்

Unique talents of six Tamil actors: சினிமாவில் நடிகர்கள் தங்கள் உடல், பொருள் ஆவி முழுவதையும் பங்களிப்பு செய்து வெற்றி பெறும் நோக்கோடு போராடி வருகின்றனர். இதற்காக தனித் திறமைகளை வளர்த்து வைத்துள்ள 6 நடிகர்கள் “நிக்காம முன்னேறு! நமக்கான நாள் வரும்!” என்று வெற்றியை எதிர்நோக்கி உள்ளனர் 

சூது கவ்வும் முதல் ப்ளூ ஸ்டார் வரை சிறந்த கதை அம்சத்துடன் கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன் பறையடிப்பதில் வல்லவராம். நாட்டுப்புற இசையோடு இணைந்த பறையை, குழுவினரோடு இசைக்கும் அசோக் செல்வனுக்கு இன்னும்  நாட்டுப்புற இசை உடன் கூடிய கிராமத்து சப்ஜெக்டை மையமாகக் கொண்ட படங்கள் அமையாதது வருத்தமே!

தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த சாக்லேட் பாய் ஆர்யா. சந்தானம் முதற்கொண்டு பல நடிகர்கள் கார் வாங்க இவரை ஆலோசித்தே முடிவெடுப்பார்களாம். பல வகையான சொகுசு கார்களை அடுக்கி வைத்திருக்கும் ஆர்யா ரேஸர் போல வேகமாக கார் ஓட்டுவாராம் இதை சந்தானமே பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

Also read: தளபதியின் சட்டையை பிடித்து சண்டை போடும் பிரசாந்த்.. GOAT படத்தில் நடந்த மோதல் வீடியோ

90 கால கட்டங்களில்  இளம்பெண்களின் கனவு கண்ணனாக இருந்த பிரசாந்த் இன்று விஜய்யுடன் வெங்கட் பிரபுவின் G.O.A.T  படத்தில் இணைந்துள்ளார். திரைக்கு வருவதற்கு முன்பே லண்டன் சென்று கிராபிக் டிசைனர் படிப்பு படித்து இருந்தாராம். மேலும் கல்வியில் சுட்டியான அவருக்கு இரண்டு மெடிக்கல் காலேஜிலிருந்து சீட் கிடைக்க இருந்த போதும் தன் தந்தையின் ஆசைக்காக தனது கனவை தியாகம் செய்து நடிக்க வந்தாராம்.

விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் என்ட்ரியான அருண்விஜய் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி வைத்துள்ளார். தற்போதும் படங்களில் டூப் இல்லாமல் அதிக ரிஸ்க்களை தானே மேற்கொண்டு   வெற்றிக்காக போராடி வருகிறார். 

விஜய் டிவியில்  கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்றவற்றில் வி ஜேவாக பணிபுரிந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் ரக்க்ஷன். அபாரமாக பைக்  ரைடிங் மற்றும் வீலிங் செய்யும் ரக்சன் மங்காத்தா தீம் மியூசிக் உடன் பைக் ஸ்டண்ட் செய்து தனது  இன்ஸ்டாவில் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்.  போற போக்க பார்த்தா மனுஷன் அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல!

 தமிழ் சினிமாவில் நடிகராகவும் வில்லனாகவும்  வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிரட்டும் அரவிந்த்சாமி, பிசினஸ் படிப்பில் பட்டம் பெற்றுள்ள அரவிந்த்சாமி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக பிசினஸ் செய்து வந்துள்ளார். இது தவிர  புதிர் கணக்குகளை திறம்பட கையாளும் அரவிந்த்சாமி  அரசியலைப் பற்றி கேட்டால் பக்கம் பக்கமாக பேசுவாராம்.

Also read: அரவிந்த்சாமி படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அக்கடதேசம் வரை பரவிய மணிரத்னம் புகழ்

Trending News