செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

16 வயதினிலே படம் பற்றி அறியாத 5 விஷயங்கள்.. ஆரம்பத்தில் இல்லாத 2 முக்கிய கதாபாத்திரம்

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ரஜினி, கமலஹாசன் ,ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யராஜ், கவுண்டமணி என பலரும் நடித்துள்ளனர். அந்த காலத்தில் அதிகமான அவுட்டோர் ஷூட்டிங்கில் எடுத்த இந்த திரைப்படம் 175 நாட்கள் திரை கண்டது.

மயிலு: இந்த படம் மயில் என்னும் கேரக்டரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்வதால் இந்த படத்திற்கு முதலில் ‘மயில்’ என்று பெயர் வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் ராஜாக்கண்ணுவிடம் சென்ற பிறகு இந்த படத்திற்கு ’16 வயதினிலே என பெயர் மாற்றி வைக்கப்பட்டது.

கே பாக்யராஜ்: இயக்குனர் பாக்யராஜின் பங்களிப்பு மிகப் பெரியது. இந்த படத்திற்கு சில கதாபாத்திரங்களை மாற்றி படத்தை கமர்ஷியல் படமாக மாற்றினார்.

“பத்த வச்சுட்டியே பரட்டை “: இந்த படத்தின் மிக முக்கியமான கேரக்டர் என்றால் படத்தின் வில்லன் பரட்டை தான். முதலில் இந்த கேரக்டரில் பாக்யராஜ் தான் நடிப்பதாக இருந்தது. பின்பு ரஜினிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

கடைசியில் இணைக்கப்பட்ட கவுண்டமணி: இந்த படத்தில் முதலில் காமெடி காட்சிகள் எழுதப்படவில்லை. பின்பு கதையின் சுவாரஸ்யத்தை மெருகேற்றவே உதவி இயக்குனர் பாக்யராஜ், கவுண்டமணி கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார்.

பிறமொழிகளில் ரீமேக்: தமிழ் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொழிபெயர்க்கப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

16 வயதினிலே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல் கல். ரஜினி, கமல் வளர்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாரதிராஜாக்கு முதல்படமே மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

- Advertisement -spot_img

Trending News