தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இதற்கு முன்னதாகவே தளபதி 68 படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி வெங்கட் பிரபு, விஜய், யுவன் கூட்டணியில் இப்படம் உருவாகிறது.
இவ்வாறு விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்து சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அரசியலுக்கு வரவும் அடிதளம் போட்டு வருகிறார். வாரிசு படத்தில் நடிக்கும் போதே இதற்கான வேலைகள் எல்லாவற்றையும் விஜய் தொடங்கி விட்டாராம். விஜய் அரசியலுக்கு வருவது உறுதியான பிறகு ஒவ்வொரு வேலையும் அழகாக செய்து வருகிறார்.
Also Read : விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன வாரிசு.. மனவேதனையில் தவித்து வாடும் அப்பா நடிகர்
அந்த வகையில் இவருக்கு அரசியல் ஆலோசனைகள் எல்லாமே பழ கருப்பையா தான் கூறி வருகிறார். அதுமட்டும்இன்றி வயதில் மூத்த அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் விஜய்க்கு பக்க பலமாக இருக்கிறார்களாம். இவர்களுடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவையும் விஜய் பெற்றுள்ளார்.
இவர்கள் எல்லோரையும் ஒரு சேர்த்து ஒவ்வொரு பிரச்சனைகளையும் அழகாக கையாண்டு வருகிறார். மேலும் ஆடியோ லாஞ்ச் பங்க்ஷனில் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை மதுரையில் நடத்தலாம் என்ற திட்டத்திலும் செயல்பட்டு வருகிறார்.
Also Read : அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு
சினிமாவிலும் சாதித்து, அரசியலிலும் சாதித்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்நிலையில் விஜயகாந்த், ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுக்கு அரசியல் ஆசை இருந்தும் அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியவில்லை. இதனால் அவர்களால் சினிமாவைப் போல் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் விஜய் ரசிகர்களையும், மக்களையும் தன் பக்கம் கொண்டு வர பல வேலைகள் செய்து வருகிறார். இவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்தால் கண்டிப்பாக பொறுமையாக இருந்து எம்ஜிஆர்க்கு அடுத்து முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போது விஜய் ஆயத்தமாகி வருகிறார்.
Also Read : அடுத்த வாட்டி வரும்போது குடிக்காம வாங்க.. ராதாரவியை அவமானப்படுத்திய விஜய்யின் போன் கால்