Kamal Speech: கமல் எப்போதுமே பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் இப்போதெல்லாம் அவர் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அரசியல் லாபத்திற்காக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் தான்.
அப்படித்தான் தற்போது அவர் பேசியிருக்கும் அனாவசியமான பேச்சு பூதாகரமாக வெடித்துள்ளது. தற்போது சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல் மக்கள் ஏரிகளில் வீட்டை கட்டியது பற்றி விமர்சித்திருந்தார். கிடைச்சா போதும்னு அது மேல மண்ணைக் கொட்டி வீடு கட்டிடுறோம். இது நம்ம தப்புதான். அதுக்கப்புறம் தான் அரசாங்கத்தை சொல்லணும்னு கூறியிருந்தார்.
Also read: பாவமன்னிப்பு கொடுக்க தயாராகும் ஆண்டவர்.. நியாயத்தை கட்டி காக்கும் கமலின் அலப்பறை
இதுதான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் ஏரியில் தான் நாம் வீட்டை வாங்கி இருக்கிறோம் என்று மக்களுக்கு இப்போது தான் தெரிகிறது. ஆனால் அரசாங்கம் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும் போது அது ஏரியா, குளமா என்று தெரியவில்லையா.
இது மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதி இல்லை என்று தெரிந்தும் அனுமதி கொடுத்தது யாருடைய தவறு? இன்றைய தேதியில் ஆழ்வார்பேட்டையில் ஒரு சதுர அடியின் விலையே ஐம்பதாயிரத்தை தாண்டும். அப்படி இருக்கும்போது விலை குறைவான ஏரியாக்களை பார்த்து தான் மக்கள் வீடு வாங்குகின்றனர்.
சில சாமானிய மக்களுக்கு இது குறித்து நுணுக்கமாக தெரிவதில்லை. சினிமாக்காரர்கள் ரியல் எஸ்டேட்டுக்கு விளம்பரம் செய்வதை பார்த்து வீடு வாங்கும் சிலரும் இருக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் மக்களை மட்டும் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
Also read: ஆண்டவரின் அதிரடியில் ஆடிப்போன நிக்சன்.. டிசிபி ராகவனாக வேட்டைக்கு தயாராகும் கமல்
அரசாங்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் கேள்வி கேட்காத ஆழ்வார்பேட்டைக்காரர் மக்களை குறை கூறுகிறார். நியாயப்படி பார்த்தால் கமல் மக்களுக்கு ஆதரவாக நின்று சாட்டையடி கேள்விகளை அதிகாரிகளை நோக்கி கேட்டிருக்க வேண்டும். ஆனால் அனாவசியமாக பேசி விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.