வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அள்ள அள்ள குறையாத வசூல்.. லைக்காவை கெட்டியாக பிடித்துக் கொண்ட மணிரத்தினம்

லைக்கா ப்ரொடக்சன்ஸ் மற்றும் மணிரத்தினம் இணைந்து தயாரித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. மணிரத்தினத்தின் பல வருட கனவான இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. ஆதலால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்காகவும் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படி ஒரு வெற்றி கிடைத்ததற்காக பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தினந்தோறும் பார்ட்டி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் வேலை செய்த டெக்னீசியன்கள் அனைவருக்கும் மணிரத்தினம் தனித்தனியாக பார்ட்டி வைத்து வருகிறார். அதாவது ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் ஒவ்வொரு நாளும் பார்ட்டி நடக்கிறதாம்.

Also read:எல்லா படங்களிலும் இளசுகளை மயக்க மணிரத்தினம் வைக்கும் ஒரே வசனம்.. ஹீரோக்களை குத்திக் கிழிக்கும் ஹீரோயின்

அது மட்டுமல்லாமல் வரும் நவம்பர் 5ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தில் பணி புரிந்த நடிகர், நடிகைகள் உட்பட அனைவருக்கும் மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விழாவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விருதும் வழங்கப்பட இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் நடந்த சக்சஸ் பார்ட்டிகளில் இதுதான் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறதாம்.

இதில் கலந்து கொள்வதற்காக லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரன் லண்டனில் இருந்து வர இருக்கிறார். அவர் இந்த விழாவில் பங்கேற்பதற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது இந்த விழாவின் போது ஒரு முக்கிய அறிவிப்பையும் ரசிகர்களுக்கு அவர் அறிவிக்க இருக்கிறார். அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினம் ரஜினியை இயக்கப் போவதாக கூறப்பட்டது.

Also read:உலகளவில் பொன்னியின் செல்வன் செய்த மொத்த வசூல்.. ரஜினியின் 2.0-வை ஓரங்கட்ட போகும் மணிரத்தினம்

தற்போது அந்த விஷயம் உறுதியாகி இருக்கும் நிலையில் பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டியில் அதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதன் மூலம் மணிரத்தினம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். இந்த பொன்னியின் செல்வன் வெற்றியால் மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி இருக்கிறது.

அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட மணிரத்தினம் தற்போது அடுத்த பட வேலைகளையும் நாசுக்காக ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் அவர் இணைவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து மணிரத்தினம் லைக்காவுக்காக மீண்டும் படம் இயக்கும் முடிவிலும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Also read:மணிரத்தினம் சார், மேக்கிங் எல்லாம் இவங்ககிட்ட கத்துக்கணும்.. புது பட ரிலீஸ், பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை

Trending News