வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

43 வயதில் அகால மரணம்.. பாரதிகண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவிக்கு ஏற்பட்ட கொடுமை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது. தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் மனைவி திடீரென மரணம் அடைந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

90 காலகட்டத்தில் இருந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் பரத் கல்யாண். சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இப்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி வேலை செய்யும் ஹாஸ்பிடலின் டீனாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும், ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.

Also read : கிளைமேக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா.. கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்

இந்நிலையில் 43 வயதான பிரியா இன்று மரணம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவர் பேலியோ டயட் என்ற முறையை பின்பற்றி வந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவின் காரணமாக இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்த பிரியாவுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது.

இதனால் அவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் சர்க்கரை நோய் அதிகமானதால் அவர் கோமா நிலைக்கு சென்று இருக்கிறார். எப்படியாவது அவர் மீண்டு வந்து விடுவார் என்று அனைவரும் நினைத்த நிலையில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு பிரியா மரணம் அடைந்து விட்டார். இது தற்போது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read : மண்டபத்திலிருந்து பாதியிலேயே எஸ்கேப் ஆன வெண்பா.. உச்சகட்ட பரபரப்பில் பாரதி கண்ணம்மா

மேலும் மனைவியை இழந்து வாடும் பரத் கல்யாண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது பிரியாவின் தங்கை வெளியூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் காரணத்தால் அவருடைய இறுதிச்சடங்கு நாளை அவருடைய வீட்டில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்காக இதுபோன்று டயட் முறையை ஃபாலோ செய்து வரும் பலருக்கும் பிரியாவின் இந்த மரணச் செய்தி கடும் பயத்தை கொடுத்துள்ளது. ஆரோக்கியம் என்று நினைத்து பின்பற்றிய அந்த டயட் பிரியாவுக்கு எமனாக முடிந்துள்ளது பலருக்கும் உடல் நலம் பற்றிய அபாய மணியையும் அடித்துள்ளது.

Also read : கல்யாணத்துக்கு தயாராகிய வெண்பா.. கிளைமாக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா

Trending News