வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நீ தான் அடுத்த சிவகார்த்திகேயன் இப்பவே முட்டுக் கொடுக்கப்படும் நடிகர்.. விஜய் இடத்துக்கு SK ஆசைப்பட்டது தப்பே இல்லை!

Upcoming actor was called as next Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகர்களையும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கலாய்க்கும் விதமாகவும் தடம் பதித்த முன்னணி நடிகர்களின் அடுத்த வரவாக கூறுவது உண்டு.

உதாரணத்திற்கு விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று கூறியது போல், வளர்ந்து வரும் நடிகர்களை, புகழ்வது போல சகட்டுமேனிக்கு முன்னணி நடிகர்களுடன் கோர்த்து விடுகின்றனர் அவர்களது ரசிகர்கள்.

அப்படித்தான் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த உள்ளதை அடுத்து, ஹிட் கொடுத்து வரும் சிவகார்த்திகேயனை அடுத்த விஜய் என்று கொண்டாடி வருகின்றனர்.

இதுவே விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வரும் மிர்ச்சி விஜய்யை எல்லோரும் அடுத்த சிவகார்த்திகேயன் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Mirchi Vijay with sivakarthikeyan

சமீபத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் நடித்துள்ள வைஃப் (WIFE) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது.  

இன்றைய நடைமுறையில், கணவன் மனைவிக்கிடையான காதலை வித்தியாசமாக கூறும் படமாக உருவாகி வருகிறது WIFE.

அடுத்த சிவகார்த்திகேயன் ஆகிறார் மிர்ச்சி விஜய்

சின்னத்திரையில் பல ஹிட்டான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, அதன் மூலம் பிரபலமானவர்தான் மிர்ச்சி விஜய். LGM திரைப்படத்திலும்  சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளார் மிர்ச்சி விஜய். 

சிவகார்த்திகேயன் போல் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று வெற்றியை நெருங்கும் நேரத்தில், சிவாவிடம் இருக்கும் அனைத்து தகுதிகளும் இவருக்கும் இருக்கிறது என்று ஏத்தி விடுகிறார்களர்கள்.

இப்பவே அந்த இடத்தை பிடிக்க கனவு கண்டு, அவர் போலவே அனைத்து மேடைகளிலும் வெற்றிக்கான அடித்தளத்தை பலமாக போட்டு வருகிறாராம். 

“அண்ணன் எப்போ போவான்! திண்ணை எப்போது காலியாகும் என்ற  கிராமத்து பழமொழிக்கு ஏற்ப, ஒரு நடிகரை காலி செய்து மற்றொருவர் அந்த இடத்தை பிடிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர்.

Trending News