தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே தற்போது மீண்டும் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பல கோடி செலவழித்து தயாரான படங்கள் அனைத்துமே தற்போது ரிலீஸ் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கின்றது.
அதில் சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தைச் சொல்லலாம். பாதி படம் உருவாகி மீதி படம் எடுப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தயாரிப்பாளர் பிரச்சனை என்றால் இன்னொரு பக்கம் கொரானா.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் மோகன்லால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படமும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.
அதேபோல் ஏற்கனவே ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட ராஜமௌலியின் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படமும் கன்னட சினிமாவில் உருவாகியிருக்கும் கே ஜி எஃப் 2 என்ற படமும் தற்போது தள்ளி செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஆனால் இவர்களைவிட ரொம்ப பாவமாக இருப்பது மணிரத்னம் தான். கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் பொன்னியன் செல்வன் எனும் படத்தை எடுத்து வருகிறார். இரண்டு பாகமாக வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் கூட எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
அதேபோல் பிரபாஸ் நடிப்பில் 400 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் பிரபாஸ் ராதே ஷ்யாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிச் செல்ல உள்ளதாம். இதனால் அடுத்த ரிலீஸ் தேதி எப்போது என்பதை முடிவு செய்ய முடியாமல் படக்குழுவினர் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.