வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

9 Movie Updateds: பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் புது படங்கள் வெளிவருகிறது என்றால் அவர்களுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரும் அந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் புது படங்களில் உள்ள ஒவ்வொரு அப்டேட்டுகளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அப்படி இந்த வாரம் வெளிவர உள்ள ஒன்பது படங்களின் அப்டேட்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

தெலுங்கு படத்தின் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி திரைப்படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார். அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.

Also read: அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

இதனை தொடர்ந்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சாலார் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் படு தோல்வியடைந்தது. அட்லீஸ்ட் தற்போது கூட்டணி வைத்துள்ள கே ஜி எஃப் இயக்குனர் காம்போவில் வெளிவர இருக்கும் இப்படமாவது வெற்றி அடையுமா என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி வெளி வருகிறது. மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள பகவந்த் கேசரி திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.

Also read: விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலை இந்த வாரம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக நாகார்ஜுனா கமிட் ஆகியுள்ள 99 ஆவது படத்தின் டைட்டில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அடுத்து மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்தின் போஸ்டர் இந்த வாரம் வெளிவர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தொடர்ந்து சமந்தா தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த படம் இவருக்கு கை கொடுக்குமா என்று இவருடைய ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் லோகேஷ் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் அடுத்த கட்ட அப்டேட் இந்த வாரம் வெளியிடப் போகிறார்கள். இப்படி தொடர்ந்து கிட்டத்தட்ட 9 படத்திற்கான அப்டேட்டுகள் இந்த வாரம் தாறுமாறாக வெளி வருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

Trending News