2019ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில், ஹெச் வினோத் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான நேர்கொண்டபார்வை படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார். இவர்களது கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் கைகோர்த்துள்ளது.
இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருட காலத்திற்கு மேலாகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராததால் வெறியேறியுள்ளனர் தல ரசிகர்கள்.
இந்த சமயத்தில் இயக்குனர் வினோத்திற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அதை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் வலிமை படத்தின் அப்டேட் வராத கேப்பில் வலிமை பட இயக்குனருக்கு குழந்தையே பிறந்திருச்சு.
மேலும் கடந்த ஒரு சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த தல அஜித் தற்போது மீண்டும் வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் இளமையாக காட்சி அளிக்க உள்ளார்.
அதேபோல் இந்தப் படத்திற்கான கதாநாயகி பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. தல ரசிகர்களும் வலிமை படத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.