வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சோட்டா பையா என்னிடம் வால்லாட்டாதே.. கிரிக்கெட் வீரருக்கு வார்னிங் கொடுத்த அண்ணாச்சி பட ஹீரோயின்

ஆசிய கப் இரண்டாவது நாள் கிரிக்கெட் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு இந்திய ரசிகர்களும் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்த்த ஆட்டம் என்றே சொல்லலாம். ஆனால் இந்த மேட்சை தாண்டி ஒரு சுவாரஸ்யமான விஷயமும் அந்த ஸ்டேடியத்தில் நடந்து உள்ளது. இப்போது நெட்டிசன்கள் அந்த விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர்.

ஊர்வசி ரவுட்டேலா-ரிஷப் பண்ட் இருவரும் முன்னாள் காதலர்கள் எனவும், இவர்கள் இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதம் நடந்ததும் அனைவரும் அறிந்ததே. ஒரு பேட்டி ஒன்றில் ஊர்வசி ரவுட்டேலாவிடம் எந்த கிரிக்கெட் வீரர் பிடிக்கும் என்று கேட்ட கேள்விக்கு நான் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஊர்வசி ரவுட்டேலா இந்தியா-பாகிஸ்தான் மேட்சை பார்க்க வந்தது தான் இதற்கு காரணம்.

Also read: ஜொலிக்காமல் போன 5 வாரிசுகள்.. கிரிக்கெட் ஜாம்பவான் அப்பாக்களின் சொதப்பல் மகன்கள்

ஊர்வசி ரவுட்டேலா பாலிவுட் நடிகை. 2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றவர். அதன் பிறகு பாலிவூட் படங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது இவர் பாலிவுட் துறையிலும், மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார். தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலமாக ஊர்வசி தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் ஊர்வசி ரவுட்டேலா-ரிஷப் பண்ட் இருவருக்கும் இடையே ஒரு பெரிய சண்டையே நடந்தது. இதற்கு காரணம் ஊர்வசி ஒரு பேட்டியில், கிரிக்கெட் வீரர் ரிஷப் தன்னை ஒரு நட்சத்திர ஹோட்டலில் பார்க்க வந்ததாகவும், ஆனால் ஊர்வசி அசதியில் தூங்கி விட்டதாகவும், எழுந்து பார்க்கும் போது 15, 16 மிஸ்டுகால் ரிஷப்பிடம் இருந்து வந்திருந்ததாகவும் கூறினார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ரிஷப் இன்ஸ்ட்டாகிராமில் பதில் பதிவு போட்டு பின்னர் நீக்கி விட்டார்.

Also read: அதிக சம்பளம் வாங்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. பென்ட்லி, ஆடி நிறுவனம் எல்லாம் இவங்க பாக்கெட்டில்

ரிஷப் தன்னுடைய பதிவில், ஒரு சிலர் தங்களுடைய பாப்புலாரிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுகிறார்கள், இவர்களுக்கு புகழும், பேமசும் தான் முக்கியம் என எழுதி இருந்தார். இதற்கு ஊர்வசி சோட்டா பையா பேட், பால் வச்சு விளையாடு என்கிட்டே விளையாடாதே என்று பதிவிட்டு அதை இன்னும் டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் ரிஷப் விளையாடவில்லை, மேலும் இவர்கள் ஒருவரை ஒருவர் நக்கலாக பார்த்துக்கொண்டார்கள் எனவும் மீம்ஸ்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் கிரிக்கெட் பார்த்ததே இல்லை என்று சொன்ன ஊர்வசி கிரிக்கெட் கிரவுண்டுக்கு வந்ததும் இப்போது மீம்ஸில் நக்கலடிக்கப்பட்டு வருகிறது.

Also read: விஜய்யும் தோனி மாதிரிதான்.. தீவிர ரசிகனாக மாறிய கிரிக்கெட் வீரர்

Trending News