தமிழ் சினிமாவில் பல பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. இவர் கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
கவிஞர் வாலியைப் பொருத்தவரை பன்முகத் திறமை கொண்டவர். பாடல்கள் எழுதுவதையும் தாண்டி படங்களில் நடிப்பது மற்றும் எழுத்தாளராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு வெளியான பொய்க்கால் குதிரை எனும் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார் வாலி. அதன் பிறகு சத்யா, ஹேராம், பார்த்தால் பரவசம் மற்றும் காதல் வைரஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வாலி எழுது பாடல் அனைத்தும் மக்களிடம் வரவேற்பை பெறுவதால் இவரது பாடல் வரிகளுக்கு ஒரு தனி மகத்துவம் இருக்கும். அதனால் பலரும் இவரது பாடல் வரிகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
அப்போதுதான் மகளிர் மட்டும் படத்தில் வாலி எழுதிய “காள மாடு ஒன்னு கரவ மாடு மூணு” எனும் பாடலை கேட்ட ஊர்வசி இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். ஏனென்றால் பெண்களை வைத்து இழிவுபடுத்துவது போல் இந்த வரிகள் அமைந்திருக்கும்.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த வரிகள் சாதாரணமாகத்தான் தெரியும் ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இரட்டை அர்த்தமுள்ள வரி என்பது புரியும்.
இந்த பாடலுக்கு ஊர்வசி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காதலன் படத்தில் வைரமுத்து “ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி” என ஊர்வசி வைத்தே ஒரு பாடலை எழுதினார்.
இதற்கு ஊர்வசி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அன்றைய காலத்தில் அமைதியாக இருந்துள்ளார். அப்போது பல ரசிகர்களும் வாலி எழுதிய பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்வசி ஏன் வைரமுத்து ஊர்வசி வைத்த பாடல் எழுதிய பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கருத்து தெரிவித்து வந்தனர்.