The Apprentice: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த தேர்தலில் முதலில் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக இருந்தது.
அதன் பின்னர் பைடன் வயது மூப்பை காரணம் காட்டி நிறைய நெகட்டிவ் விஷயங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இதனால் பைடன் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நியமித்தார்.
கமலா ஹாரிஸ் வேட்பாளரானதிலிருந்து அவருக்கு நிறைய ஆதரவுகள் பெருக ஆரம்பித்துவிட்டது. அதே நேரத்தில் ட்ரம்ப் ஒரு மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவருடைய காது பகுதியில் கொண்டு பாய்ந்து சென்றதெல்லாம் நடந்தது.
நம்ம ஊரில் எல்லாம் தேர்தல் வருகிறது என்றால் அரசாங்கம் பற்றி கருத்து கூறும் படங்களை கூட சில மாதங்களுக்கு ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் இது போன்ற சட்ட திட்டமெல்லாம் எதுவும் கிடையாது.
அமெரிக்க அதிபர் தேர்தலை புரட்டி போட போகும் கதைக்களம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தையே தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரிலீஸ் செய்கிறார்கள். தி அப்ரெண்டிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ட்ரம்பின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏற்கனவே இந்த படம் தனக்கு எதிரானதாக எடுக்கப்பட்டிருப்பதாக ட்ரம்ப் விமர்சனம் வைத்து விட்டார். மேலும் டிரம்பின் மீது அவருடைய மனைவி இவானா வைத்த வன்புணர்வு குற்றச்சாட்டு, வழக்கறிஞர்களை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது என அவருடைய நிறைய நெகட்டிவ் விஷயங்களை இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
இருந்த போதும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி படக்குழு ரிலீஸ் செய்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வினியோகஸ்தர்கள் முன் வரவில்லை என்றாலும், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது தேர்தலுக்கு முன்னாடி ஆக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த படம் ரிலீஸ் ஆவது அமெரிக்காவின் அதிபர் தேர்தலையே தேர்தல் முடிவையே புரட்டி போடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.